அஜித்தை உற்சாகமாக வரவேற்ற விஜய்
லண்டனில் நடைபெற்ற இந்த பந்தயத்தைத் தொடங்கி வைக்க, தமிழக முதல்வர் விஜய்க்கு அஜித்குமார் தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்திருந்தார். அழைப்பை ஏற்ற விஜய், கடந்த 10ஆம் தேதி சென்னையிலிருந்து துபாய் வழியாக லண்டன் சென்றார்.
பந்தயக் களத்திற்கு முதல்வர் விஜய் வந்தபோது, அஜித்குமார் அவரை நோக்கி நடந்து சென்றார். அப்போது விஜய் ஓடிச் சென்று அஜித்தைக் கட்டியணைத்து முத்தமிட்டு அன்பைப் பகிர்ந்துகொண்டார். அஜித்தும் அவரை ஆரத்தழுவி உற்சாகமாக வரவேற்றார். இருவரும் இணைந்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். அப்போது அஜித்தின் பந்தயக் காரின் மீது அமர்ந்தும் விஜய் புகைப்படம் எடுத்தார்.
Ajith Vijay Silverstone race நிகழ்வில் 44 பந்தயக் கார்கள் பங்கேற்றன. பந்தயம் தொடங்குவதற்கு முன்பு, தமிழக முதல்வர் விஜய் பச்சைக்கொடி அசைத்து போட்டியை முறைப்படி தொடங்கி வைத்தார். அவருடன் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் அரசு அதிகாரிகள் இருந்தனர்.
பந்தயத்தைக் காணவும், அஜித்குமாருக்கு வாழ்த்து தெரிவிக்கவும் நடிகைகள் திரிஷா, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோரும் சில்வர்ஸ்டோன் மைதானத்திற்கு வந்திருந்தனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யும் அஜித்தும் சந்தித்த இந்த நிகழ்வு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
































