காணாமல் போன நகைகளை மீட்க போலீஸார் முயற்சி
வைரம் பதித்த தங்க வளையல் உள்ளிட்ட உயர் மதிப்புள்ள நகைகள் காணாமல் போனதாக ஆஷா பட்டேல் போலீஸில் புகார் அளித்தார். முதலில் மர்ம நபர் மீது புகார் பதிவு செய்யப்பட்டது. பின்னர், தங்கள் வீட்டில் பணியாற்றிய சீமா காடே மீது சந்தேகம் இருப்பதாக ஆஷா பட்டேல் தெரிவித்தார்.
சீமா குற்றத்தை ஒப்புக்கொண்டு நகைகளைத் திருப்பித் தர வேண்டும் என்று சுமார் ஐந்து முதல் ஆறு மாதங்களாகக் கேட்டதாகவும், அவர் நகைகளைத் திருப்பிக் கொடுக்காததால் புகார் அளித்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அவர் அமீஷா பட்டேல் வீட்டில் வேலை செய்து வந்தார்.
சீமா வீராரில் இருப்பது தெரிய வந்ததைத் தொடர்ந்து, போலீஸார் அவரைப் பிடித்து விசாரித்து வருகின்றனர். கைது செய்யப்பட்டவரிடமிருந்து திருடப்பட்ட தங்க வளையல் மற்றும் பிற நகைகள் இதுவரை மீட்கப்படவில்லை. அவற்றை மீட்கும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். Ameesha Patel jewellery theft குறித்து திருட்டு நடந்தது உண்மை என அமீஷா பட்டேல் தெரிவித்துள்ளார். தங்க வளையல் கடந்த ஜனவரி மாதம் திருடப்பட்டதாகக் கூறப்படுகிறது.































