சுமார் ஒரு மாத காலம் திட்டமிடப்பட்டிருந்த படப்பிடிப்பு, மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்றது. இரண்டாம் கட்டம் நிறைவடைந்ததை முன்னிட்டு, 37 விநாடிகள் ஓடக்கூடிய கிளிம்ஸ் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் படத்தின் சில காட்சிகளும், படப்பிடிப்பு நடைபெறும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.
‘சேயோன்’ படத்தின் படக்குழு
‘தாய் கிழவி’ படத்தை இயக்கிய சிவகுமார் முருகேசன், ‘சேயோன்’ படத்தை இயக்கி வருகிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் டர்மரிக் மீடியா சார்பில் கமல்ஹாசன், மகேந்திரன் இணைந்து படத்தைத் தயாரிக்கின்றனர்.
Sivakarthikeyan Seyon film படத்தில் பாக்ய ஸ்ரீ போஸ், பால சரவணன், அருள்தாஸ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். படத்தின் அடுத்தகட்ட பணிகள் குறித்த தகவல்கள் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.































