இதே போட்டியில் நடிகர் அஜித்குமார் போட்டியாளராகக் களம் இறங்குகிறார். விஜய் முதலமைச்சரானதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக அஜித் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தமிழ்நாட்டில் விளையாட்டுத் துறையை மேம்படுத்த விஜய் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.
சில்வர்ஸ்டோனில் அஜித்தின் பந்தயப் பங்கேற்பு
தனது அழைப்பின் பேரில் லீ மேன்ஸ் கோப்பை பந்தயத்தைத் தொடங்கி வைக்க விஜய் லண்டன் வந்துள்ளதாக அஜித் தெரிவித்தார். சில்வர்ஸ்டோன் ரேசிங் டிராக் போன்ற அமைப்பை சென்னையில் உருவாக்க முதல்வர் ஆர்வம் காட்டி வருவதாகவும் அவர் கூறினார். மோட்டார் ஸ்போர்ட்ஸ் உள்ளிட்ட போட்டிகள் இந்தியாவிலும், குறிப்பாக சென்னையிலும் நடைபெற வேண்டும் என்பதே தனது விருப்பம் என அஜித் குறிப்பிட்டார்.
Ajith Silverstone Le Mans Cup தொடரில், ‘அஜித் ரெட்ஆண்ட் பை விராஜ்’ அணிக்காக அஜித் பங்கேற்கிறார். ரோமைன் வோஸ்னியாக் உடன் இணைந்து, LMP3 Pro/Am பிரிவில் நம்பர் 16 லிஜியர் JS P325 காரை அவர் இயக்க உள்ளார். இந்தியாவின் நரேன் கார்த்திகேயன் மற்றும் ஆதித்யா பட்டேலும் LMP3 பிரிவில் போட்டியிடுகின்றனர்.
தமிழ்நாட்டில் உலகத்தரம் வாய்ந்த ஸ்போர்ட்ஸ் சிட்டி மற்றும் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்க அரசு தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
































