முகநூல் பதிவுகளுக்காக நடவடிக்கை எடுத்ததாக குற்றச்சாட்டு
மக்கள் கல்விக் கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர்களான பேராசிரியர்கள் இரா.முரளி, வீ.அரசு, சிவக்குமார், கல்வியாளர் கண குறிஞ்சி உள்ளிட்டோர் வெளியிட்ட அறிக்கையில், கல்வி தொடர்பான கருத்துகளை முகநூலில் பதிவிட்டதற்காக உமா மகேஸ்வரிக்கு தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு ஊதிய உயர்வு வெட்டு விதிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
அதிகாரிகளிடமும் அப்போதைய பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸிடமும் முறையிட்டும் நீதி கிடைக்கவில்லை என அவர்கள் கூறினர். 2024 மார்ச் 6 அன்று எந்த முன்னறிவிப்பும் இன்றி கல்வி அதிகாரிகள் பள்ளிக்கு வந்து விசாரணை நடத்தியதுடன், மன்னிப்புக் கடிதம் பெற்றதாகவும், முகநூல் பதிவுகளை நீக்க வற்புறுத்தியதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உமா மகேஸ்வரி இடைநீக்கம் செய்யப்பட்ட பின்னர் ஏற்பட்ட எதிர்ப்புகளைத் தொடர்ந்து அது விலக்கப்பட்டதாகவும், ஆனால் அரசு ஊழியர் நடத்தை விதி 12 மற்றும் 17 பி விதிகளின் அடிப்படையில் நடவடிக்கை தொடர்ந்ததாகவும் அமைப்பு தெரிவித்துள்ளது.
சிறந்த ஆசிரியர் விருது வழங்கிய அரசே பின்னர் தண்டனை அளித்தது நியாயமற்றது எனக் கூறிய கல்வியாளர்கள், Uma Maheswari salary cut நடவடிக்கையை ரத்து செய்து ஆசிரியைக்கு நியாயம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.






























