காதல் கதைக்களத்தில் உருவான திரைப்படம்
இந்தப் படத்தில் சபு மோன், அப்துல் சமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். படத்தை ஆர். கார்த்திகேயன் இயக்கியுள்ளார். கவுதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ள நிலையில், கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.
ஐங்கரன் இன்டர்நேஷனல் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் சார்பில் கே. கருணாமூர்த்தி, அசோக் செல்வன், அபிநயா செல்வம் ஆகியோர் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர். காதல் கதைக்களத்துடன் அழகான உணர்வுகளையும் இணைத்து, சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக இது உருவாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
‘போர் தொழில்’ படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜா இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். Anbil Avan release date ஆக அறிவிக்கப்பட்டுள்ள செப்டம்பர் 25-ம் தேதி, படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.





























