இந்த முன்மொழிவு, பிரித்தானியாவில் நடைமுறைக்கு வந்த “Tobacco-Free Generation” மாதிரியைப் பின்பற்றுகிறது. இதன்படி, 2009க்கு பின் பிறந்தவர்கள் எப்போதும் சட்டபூர்வமாக சிகரெட் வாங்க முடியாத வகையில் சட்டம் உருவாக்கப்படலாம்.
இந்த யோசனை தற்போது Assurance Maladie வெளியிட்டுள்ள 2027 ஆம் ஆண்டுக்கான பரிந்துரை அறிக்கையின் ஒரு பகுதியாகும். இது இன்னும் சட்டமாகவில்லை. முதலில் ஜூலை 9 அன்று தேசிய சுகாதார காப்பீட்டு நிதி (Cnam) நிர்வாக சபையின் ஒப்புதலைப் பெற்று பின்னர் பிரான்ஸ் அரசு மற்றும் நாடாளுமன்றத்தின் பரிசீலனைக்கு அனுப்பப்படும்.
பிரான்சில் ஐரோப்பாவிலேயே அதிக புகைப்பிடிப்பு விகிதங்களில் ஒன்று இருப்பதாகக் குறிப்பிடும் அந்த அறிக்கை, பிரான்ஸ் சிகரெட் விற்பனை தடை நடவடிக்கைகள் மூலம் எதிர்கால சுகாதாரச் செலவுகளை குறைக்க முடியும் என்றும் வலியுறுத்துகிறது. இதற்கு முன்பாகவே 2025 முதல் பள்ளிகள் பூங்காக்கள் கடற்கரைகள் உள்ளிட்ட பல பொது வெளிப்புற இடங்களில் புகைப்பிடிப்பதற்கும் தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.
































