மாணவர்களிடையே அதிகரித்து வரும் உடல் பருமன், நீரிழிவு அபாயம் மற்றும் தவறான உணவுப் பழக்கங்களை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.புதிய வழிகாட்டலின்படி சாசேஜ், ஹாட் டாக், சாக்லேட், பிஸ்கட் வகைகள் மற்றும் இனிப்பு கலந்த பானங்கள் அனைத்தும் முழுமையாகத் தடை செய்யப்படுகின்றன.அதற்கு பதிலாக பழங்கள், பால் சார்ந்த ஆரோக்கிய பானங்கள், குறைந்த சர்க்கரை உணவுகள் மற்றும் சத்தான சிற்றுண்டிகளை வழங்குமாறு பள்ளி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளி உணவக உணவு தடை நடவடிக்கை மாணவர்களின் நீண்டகால உடல் நலத்தை மேம்படுத்தும் முக்கியமான முயற்சியாக பார்க்கப்படுகிறது. மேலும் பள்ளி வளாகங்களில் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை உருவாக்கும் மாற்றத்தையும் இது கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் இந்த முடிவு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மாணவர்களின் எதிர்கால ஆரோக்கியத்திற்கு இது ஒரு நல்ல தொடக்கம் எனவும் கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன.































