அதிகாரிகள் மற்றும் தொழிலாளர் உரிமை அமைப்புகள் வெளியிட்டுள்ள வழிகாட்டலின்படி சில முதலாளிகள் அல்லது இடைத்தரகர்கள் தொழிலாளர்களை சட்டவிரோதமாக கட்டுப்படுத்தி, குறைந்த சம்பளம் வழங்குதல், மிரட்டல், கட்டாய இங்கிலாந்தில் வேலை ஆவணங்களை பறிமுதல் செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கடவுச்சீட்டு அல்லது அடையாள ஆவணங்களை முதலாளர் வைத்திருப்பது.
- சம்பளம் முழுமையாக வழங்கப்படாதது அல்லது முறையற்ற கழிவுகள் செய்வது.
- வேலை விட்டு வெளியேற மிரட்டப்படுவது அல்லது அனுமதிக்கப்படாதது.
- பாதுகாப்பற்ற அல்லது மனிதாபிமானமற்ற தங்குமிடம் வழங்கப்படுவது.
- அதிக நேரம் கட்டாயமாக வேலை செய்ய வற்புறுத்தப்படுவது.
- கடன் காரணமாக வேலைவிட்டு செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்படுவது.
- உடல் அல்லது மன உளைச்சல் ஏற்படும் வகையில் மிரட்டல் அல்லது அச்சுறுத்தல் விடுப்பது.
இத்தகைய சூழ்நிலைகள் நவீன அடிமைத்தனம் அல்லது தொழிலாளர் சுரண்டலாக கருதப்படக்கூடும் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காவல்துறை அல்லது தொழிலாளர் உதவி அமைப்புகளை தொடர்புகொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.





























