அழகியல் சிகிச்சைக்கு 30% உச்சவரம்பு
புதிய விதிகளின்படி, மருத்துவர்கள் முதலில் தங்களின் அடிப்படை மருத்துவத் துறையில் ஐந்து ஆண்டுகள் பணியாற்ற வேண்டும். அதன் பின்னர், அழகியல் மருத்துவச் செயல்பாடுகளை மேற்கொள்ள கட்டாயத் தகுதிப் பயிற்சியை முடிக்க வேண்டும். கூடுதல் பணியாற்றல் அனுமதியை வழங்குவதற்கு முன், மருத்துவர்கள் சங்கம் அவர்களின் தகுதி, அனுபவம் மற்றும் தேவையான நிபந்தனைகளைச் சரிபார்க்கும்.
மருத்துவர்களின் மொத்தப் பணியில் அழகியல் நடவடிக்கைகள் அதிகபட்சம் 30 சதவீதமாக மட்டுமே இருக்க வேண்டும். மீதமுள்ள 70 சதவீத நேரம், அவர்கள் முதலில் பயின்ற மருத்துவத் துறை சார்ந்த சிகிச்சைகள் மற்றும் பணிகளுக்காக ஒதுக்கப்பட வேண்டும். France aesthetic medicine rules நோயாளிகளின் பாதுகாப்பை வலுப்படுத்தவும், பயிற்சித் தரத்தை உறுதி செய்யவும், மருத்துவச் சேவைகளுக்கான நேரத்தைப் பாதுகாக்கவும் கொண்டுவரப்படுகின்றன.
முழுமையான அமலாக்கம் 2027ல்
இந்த நடவடிக்கைகள் படிப்படியாக அமல்படுத்தப்படும் என சுகாதார அமைச்சர் Stéphanie Rist தெரிவித்துள்ளார். மருத்துவர்களின் திறன்கள் அவசர மருத்துவத் தேவையுள்ள நோயாளிகளுக்கே முன்னுரிமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக அழகியல் அறுவைச் சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களுக்கு, நடவடிக்கைகளை குறைக்க இரண்டு ஆண்டுகள் அவகாசம் வழங்கப்படும். அதன்பின் வரும் மூன்று ஆண்டுகளில், அவர்கள் மீண்டும் தங்களின் அடிப்படைத் துறையில் பெரும்பாலான பணியை மேற்கொள்ள வேண்டும். விதிகள் முழுமையாக 1 ஜூலை 2027 முதல் அமலுக்கு வரும்.































