சிறுவர்கள் மற்றும் சிறுமிகளுக்கான ஒரே சாம்பியன்ஷிப்
Test Twenty cricket tournament முறையில், ஒவ்வொரு அணியும் தலா 20 ஓவர்கள் கொண்ட இரண்டு இன்னிங்ஸ்களில் விளையாடும். இதனால் மொத்தம் 80 ஓவர்கள் கொண்ட போட்டி ஒரே நாளில் நிறைவடையும்.
இந்தத் தொடரில் தெற்காசியா, ஆஸ்திரேலேசியா, ஐரோப்பா மற்றும் துணை சஹாரா ஆப்பிரிக்கா ஆகிய நான்கு கண்டங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கின்றன. 13 முதல் 21 வயது வரையிலான வீரர்களைக் கொண்டு சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் அணிகள் அமைக்கப்பட உள்ளன.
‘சமநிலை விதி’ எனப்படும் சிறப்பு விதியின் கீழ், சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் அணிகள் தனித்தனியாகப் போட்டியிடும். எனினும், இரு அணிகளின் செயல்பாடுகளும் ஒரே போட்டி முடிவு மற்றும் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் கணக்கிடப்படும்.
இந்த அறிமுக நிகழ்வில் முன்னாள் ஆஸ்திரேலிய தொடக்க வீரர் மேத்யூ ஹெய்டன், முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் ரஸல் ஆர்னால்ட், விராட் கோலியின் சிறுவயது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா ஆகியோர் கலந்துகொண்டனர். ஆஸ்திரேலேசியா அணிக்கு வழிகாட்டியாக இருக்கும் ஹெய்டன், இளம் வீரர்களுக்கு அதிக போட்டி அனுபவம் கிடைக்க இந்த முயற்சி உதவும் என்றார்.
முதல் தொடரில் இறுதிப்போட்டி உட்பட மொத்தம் 10 போட்டிகள் இடம்பெறும். போட்டிகள் Sony LIV மற்றும் FanCode தளங்களில் நேரடியாக ஒளிபரப்பப்படும். Test Twenty cricket tournament இன் இறுதிப்போட்டி நவம்பர் 29ஆம் தேதி நடைபெற உள்ளது.































