ராயப்பேட்டை வீட்டில் மூன்று இடங்களில் சோதனை
சிறுமிகளை வன்கொடுமை செய்ததாக ஜெம் வீரமணி மீது 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் ஒரு வழக்கில் சமீபத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்குகளை விசாரிக்கும் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர், ராயப்பேட்டை வீட்டுக்கு சோதனைக்காக வந்தனர்.
காலை 10.30 மணிக்கு தொடங்கிய சோதனை மாலை 6 மணி வரை நீடித்தது. வீட்டில் உள்ள நீச்சல் குளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மூன்று இடங்களில் குழிகள் தோண்டப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. வருவாய்த் துறையினரும் தடயவியல் துறையினரும் சோதனையில் பங்கேற்றனர்.
நீதிமன்றத்தில் பெண் ஒருவர் அளித்த ரகசிய வாக்குமூலம் மற்றும் காவல்துறைக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 8 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த சோதனையில் உடல்கள் உட்பட எந்தப் பொருளும் கைப்பற்றப்படவில்லை எனவும் காவல்துறையினர் கூறினர்.
Jem Veeramani house search குறித்து காவல்துறையினர் முறையாகத் தகவல் தெரிவிக்கவில்லை என்றும், ஜெம் வீரமணியின் மனைவி தாக்கப்பட்டதாகவும் அவரது தரப்பு வழக்கறிஞர் குற்றஞ்சாட்டியுள்ளார்.






























