அறிவிப்பின்படி, RER A, RER B, RER C, RER D மற்றும் RER E ஆகிய சில வழித்தடங்களில் குறிப்பிட்ட நேரங்களில் அல்லது குறிப்பிட்ட பகுதிகளில் சேவைகள் இடைநிறுத்தப்படுகின்றன. சில பகுதிகளில் மாற்றுப் பேருந்துகள் இயக்கப்படுவதுடன் சில Transilien மற்றும் Tram பாதைகளிலும் பணிகள் காரணமாக வழக்கமான சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
பிரான்சின் பாரிஸ் பயணிகள் பயணிக்கும் முன் தங்களது வழித்தடங்களின் சமீபத்திய நிலையை RATP அல்லது SNCF அதிகாரப்பூர்வ சேவைகள் மூலம் சரிபார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோடை கால நவீனமயமாக்கல் பணிகளின் ஒரு பகுதியாக இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும், பணிகள் நிறைவடைந்த பின்னர் சேவைகள் வழமைக்கு திரும்பும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





























