‘Communis Maris’ எனப் பெயரிடப்பட்ட இந்த நான்கு நாள் நடவடிக்கை அக்டோபர் 5 முதல் 8ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் 16 நாடுகளைச் சேர்ந்த 7,660 அதிகாரிகள் பங்கேற்றனர். அல்ஜீரியா, பிரான்ஸ், காம்பியா, லிபியா, மால்டா, மொரிட்டானியா, செனகல், சிரியா மற்றும் துருக்கி உள்ளிட்ட நாடுகள் நடவடிக்கையில் இணைந்திருந்தன.
41 கடத்தல் வலையமைப்புகள் அடையாளம் காணப்பட்டன
நடவடிக்கையின்போது 41 ஒழுங்கமைக்கப்பட்ட புலம்பெயர்வோர் கடத்தல் குழுக்கள் அடையாளம் காணப்பட்டன. கைது செய்யப்பட்டவர்களில் 221 பேர் புலம்பெயர்வோர் கடத்தலில் சந்தேகிக்கப்படுபவர்கள் என்றும், 16 பேர் மனிதக் கடத்தலில் தொடர்புடையவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலி பயண ஆவணங்களைத் தயாரித்தல் மற்றும் பயன்படுத்துதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் மேலும் 25 பேர் காவலில் எடுக்கப்பட்டனர்.
அதிகாரிகள் 3,78,000க்கும் மேற்பட்ட நபர்களைச் சோதித்தனர். இதில் 109 சாத்தியமான பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டதுடன், 1,715 முறையற்ற குடியேற்றத்தினர் கண்டறியப்பட்டனர். லிபியாவில் மனிதக் கடத்தலுக்கான சாத்தியமான 34 பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டனர்.
மொராக்கோ கடற்கரைக்கு அப்பால் ஆறு நாட்களாக கடலில் சிக்கியிருந்த படகில் 30 சிறார்கள் உட்பட 70 பேர் மீட்கப்பட்டனர். மொரிட்டானியா அருகே செனகலில் இருந்து புறப்பட்ட மரப் படகில் இருந்த 80 பயணிகளும் தடுத்து நிறுத்தப்பட்டனர். Athens நகரிலிருந்து ஒருங்கிணைக்கப்பட்ட Interpol migrant smuggling crackdown நடவடிக்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் நிதியளித்தது.

































