அரசின் குடிவரவு விதிகளின்படி Visitor Visa வைத்திருப்பவர்கள் வேலை செய்வது சட்டவிரோதமானதாகும். இருப்பினும், Appendix Visitor Permitted Activities எனப்படும் அதிகாரப்பூர்வ பட்டியலில் அனுமதிக்கப்பட்டுள்ள சில குறிப்பிட்ட செயல்பாடுகளுக்கு மட்டும் விதிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதாவது அந்த அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளின் கீழ் வெளிப்படையாக குறிப்பிடப்பட்டுள்ள பணிகளை மட்டுமே UK Visitor Visa வைத்திருப்பவர்கள் மேற்கொள்ள முடியும். அதற்கு வெளியே எந்தவொரு வேலைவாய்ப்பையும் ஏற்கவோ பிரிட்டனின் வேலைவாய்ப்பு சந்தையில் ஈடுபடவோ முடியாது.
சுற்றுலா குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்தல் குறிப்பிட்ட நிகழ்வுகளில் பங்கேற்பது போன்ற குறுகிய கால நோக்கங்களுக்காகவே Visitor Visa வழங்கப்படுகிறது. பிரிட்டனில் வேலை செய்ய விரும்புபவர்கள் அதற்கான உரிய வேலை விசாவை உதாரணமாக Skilled Worker Visa முன்கூட்டியே பெற்றிருக்க வேண்டும் என்றும் அதிகாரப்பூர்வ வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டுள்ளது.





























