துர்கு தீவுக்கூட்டத்தை உலகின் சிறந்த வாசனை அனுபவம் கொண்ட இடமாக விளம்பரப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக பிரெஞ்சு நடிகர் லாம்பர்ட் வில்சன் இடம்பெறும் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. பின்லாந்தின் இயற்கைக் காட்சிகள், ஒளி, நீர் மற்றும் காற்றின் தரத்தை அவர் அந்த வீடியோவில் பாராட்டியுள்ளார்.
வேலைக்கான தகுதிகள் மற்றும் ஊதியம்
தேர்வு செய்யப்படுபவர் தீவுகளுக்குச் சென்று அங்குள்ள வாசனைகளை அனுபவித்து, அவற்றை விளக்கி, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களாகப் பதிவு செய்ய வேண்டும். அந்த அனுபவங்களை மற்றவர்களும் அறிந்து, அவற்றை நேரில் அனுபவிக்க விரும்பும் வகையில் விவரிப்பதும் பணியின் ஒரு பகுதியாகும்.
இந்த Turku Archipelago sensory guide பணிக்கு வாசனைத் திரவியப் பள்ளிப் பட்டம் தேவையில்லை. விண்ணப்பதாரர் குறைந்தது 18 வயது நிரம்பியவராகவும், பின்லாந்தில் பணியாற்றும் உரிமை கொண்டவராகவும் இருக்க வேண்டும். புகைப்படம் அல்லது வீடியோ எடுக்கக்கூடிய சாதனம், ஸ்மார்ட்போன் உள்ளிட்டவை அவசியம்.
2027 ஜூன் மாதத் திட்டம் முழுவதும் பணியில் இருக்கத் தயாராக இருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தேர்வு செய்யப்படுபவருக்கு 2027 மே அல்லது ஜூன் மாதத்தில் 5 முதல் 7 நாட்கள் வரையிலான தற்காலிக வேலை வழங்கப்படும். முழுப் பணிக்காக 2,000 யூரோ மொத்த ஊதியமும், சட்டப்படி விடுப்பு ஊதியத் தொகையும் வழங்கப்படும். விமானப் பயணம் மற்றும் தங்குமிடச் செலவுகளையும் ஏற்பாட்டாளர்கள் ஏற்க உள்ளனர்.





























