சிசிடிவி பதிவுகள் மூலம் விசாரணை தீவிரம்
மதுரை பைபாஸ் சாலையில் உள்ள நகைக்கடையில் கடந்த 12ஆம் தேதி அதிகாலை முகமூடி அணிந்த நபர் கொள்ளையில் ஈடுபட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கடைக்குள் மற்றும் அருகிலுள்ள சாலைகளில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, கையில் இருந்த டாட்டூ உள்ளிட்ட அடையாளங்கள் மூலம் பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த நிஷாந்த் மீது சந்தேகம் ஏற்பட்டது.
காவல்துறை விசாரணையின்படி, கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்திய நிஷாந்த் வீடியோ எடிட்டிங் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். அவரது கல்லூரிக் காலத் தோழியும் சமூக ஊடகத் தளத்தில் பின்தொடர்பவர்களைக் கொண்டவருமான மீனாட்சியுடன் சேர்ந்து கொள்ளைத் திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது. நகைக்கடையின் கட்டுமானப் பணிகளைப் பயன்படுத்தி, மூன்றாவது தளத்திலிருந்து கீழே இறங்கி நகைகளை எடுத்துச் சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் சுமார் 5 கிலோவை மதுரை மாடக்குளத்தில் உள்ள நிஷாந்தின் குடும்பத்துக்குச் சொந்தமான வயல்வெளியில் இருந்து காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். நகைகளை எடுத்துச் செல்ல மீனாட்சியின் பைக் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. Madurai Tanishq robbery வழக்கில் நிஷாந்த் தொடர்ந்து தேடப்பட்டு வரும் நிலையில், மேலும் நகைகள் பதுக்கப்பட்டுள்ளதா என காவல்துறையினர் தேடி வருகின்றனர்.































