அவர் வழக்கமாக RER C மற்றும் மெட்ரோ மூலம் பயணம் செய்வார். ஆனால் RER C பாதையின் ஒரு பகுதி ஜூலை நடுப்பகுதி முதல் ஆகஸ்ட் 22 வரை பராமரிப்பு பணிகளுக்காக மூடப்பட்டிருப்பதால் தனது மகனுடன் இணைந்து மாற்று பேருந்து மற்றும் Transilien J ரயில் சேவையை பயன்படுத்தினார்.
இந்த பயணத்தின் போது பேருந்தில் பயன்படுத்த வேண்டிய சரியான பயணச்சீட்டு இல்லையெனக் கூறி RATP கட்டண பரிசோதகர்கள் அவருக்கு 70 யூரோ அபராதம் விதித்தனர்.
இந்த விவகாரம் ஊடகங்களில் வெளியாகியதைத் தொடர்ந்து RATP இந்த அபராதம் தவறுதலாக விதிக்கப்பட்டது என்பதை ஒப்புக்கொண்டு முழுத் தொகையையும் திருப்பிச் செலுத்துவதாக அறிவித்துள்ளது. மேலும் பராமரிப்பு பணிகளால் பாதிக்கப்படும் பயணிகளுக்கான தகவல் மற்றும் வழிகாட்டுதலை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
RER மற்றும் பிற ரயில் சேவைகளில் நடைபெறும் பராமரிப்பு பணிகளின் போது மாற்று போக்குவரத்தை பயன்படுத்தும் பயணிகளுக்கு சரியான கட்டணச்சீட்டு மற்றும் பயண விதிமுறைகள் குறித்து தெளிவான தகவல் வழங்கப்பட வேண்டிய அவசியத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.





























