அதேவேளை வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் சனிக்கிழமை காலை 7 மணி வரை பின்னர் சனிக்கிழமை மாலை 6 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி வரை கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் takeaway மதுபானங்கள் விற்பனை செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.
ஆனால், உரிய அனுமதியுடன் இயங்கும் உணவகங்கள் பிஸ்ட்ரோக்கள் கஃபேக்கள் மற்றும் பார்களில் அமர்ந்து மதுபானம் அருந்துவதற்கு இந்தத் தடை பொருந்தாது. இந்த நடவடிக்கை வெப்ப அலை முடியும் வரை தற்காலிகமாக மட்டுமே அமலில் இருக்கும் என்றும் அதிக வெப்பத்தில் மது அருந்துவது நீரிழப்பு இதய பிரச்சினைகள் மற்றும் அவசர மருத்துவச் சம்பவங்களின் அபாயத்தை அதிகரிப்பதால் மக்கள் விதிமுறைகளை கடைப்பிடிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். பாரிஸில் கடும் வெப்ப அலை































