பொதுவாக, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு (EU) வெளியே உள்ள நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள் இத்தாலியில் சட்டபூர்வமாக தொடர்ந்து 10 ஆண்டுகள் வசித்திருந்தால் மட்டுமே குடியுரிமைக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர்.
ஆனால் சில பிரிவினருக்கு இந்த காலக்கெடு குறைக்கப்பட்டுள்ளது:
- EU நாடுகளின் குடிமக்கள் 4 ஆண்டுகள்
- அகதிகள் (Refugees) மற்றும் நாடற்றவர்கள் (Stateless persons) 5 ஆண்டுகள்
- இத்தாலிய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் 3 ஆண்டுகள்
- குறைந்தது 5 ஆண்டுகள் இத்தாலி அரசுப் பணியில் பணியாற்றியவர்கள் குடியிருப்பு கால நிபந்தனையிலிருந்து விலக்கு வழங்கப்படலாம்.
அதேவேளை இத்தாலி குடியுரிமை பெறுவதற்கு 10 ஆண்டுகள் வசித்திருப்பது மட்டும் போதுமானதல்ல. விண்ணப்பதாரர்கள் நல்ல நடத்தை போதுமான வருமானம் சட்டபூர்வ குடியிருப்பு உள்ளிட்ட பிற நிபந்தனைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
































