ஆனால், இதற்கு ஒரு முக்கிய விதிவிலக்கு உள்ளது. முன்கூட்டியே சம்பந்தப்பட்ட வெளிநாட்டவர் அலுவலகத்தின் Ausländerbehörde அனுமதியை பெற்றவர்கள் அல்லது சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிவிலக்கு பிரிவுகளுக்குள் வருபவர்கள் குறிப்பிட்ட நிபந்தனைகளின் கீழ் தங்களது குடியிருப்பு அனுமதியை இழக்காமல் ஜெர்மனிக்கு மீண்டும் திரும்ப முடியும் என அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்கள் குறிப்பிடுகின்றன.
எனவே நீண்டகாலம் ஜெர்மனிக்கு வெளியே தங்க திட்டமிடும் வெளிநாட்டவர்கள் பயணத்திற்கு முன்பாக தங்களது குடியிருப்பு நிலை தொடர்பாக Ausländerbehörde அலுவலகத்தில் ஆலோசனை பெறுவது மிகவும் அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.




























