Île-de-France Mobilités (IDFM) 2026 ஆம் ஆண்டிற்கான புதிய போக்குவரத்து கட்டண உயர்வை முன்வைத்து Navigo மாதாந்திர பாஸ் கட்டணத்தை தற்போதைய €88.80 இலிருந்து €90.80 ஆக 2026 ஜனவரி 1 முதல் உயர்த்த திட்டமிட்டுள்ளது.

இந்த உயர்வு சராசரியாக 2.3% ஆகும். IDFM–இன் கட்டண மாற்றங்கள் 2025 டிசம்பர் 10 அன்று நடைபெற உள்ள வாக்கெடுப்புக்கு உட்பட்டவை. இந்த உயர்வுடன் மெட்ரோ, RER மற்றும் பஸ்கள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்திற்கான ஒற்றை பயண கட்டணங்களும் சில சென்ட்களால் அதிகரிக்கப்பட உள்ளன.
மெட்ரோ அல்லது RER பயணங்களுக்கான சாதாரண டிக்கெட் €2.50 இலிருந்து €2.55 ஆக உயரும். பணவீக்கம் மற்றும் Île-de-France பகுதியில் போக்குவரத்து சேவைகளின் மேம்பாடு, ரயில் மற்றும் மெட்ரோ நவீனமயமாக்கல், நெட்வொர்க் விரிவாக்கம் ஆகியவற்றுக்கான கூடுதல் செலவுகள் காரணமாக இந்த கட்டண உயர்வு அவசியமென IDFM விளக்கியுள்ளது.
உயர்வு உறுதி செய்யப்பட்டால், கோடிக்கணக்கான தினசரி பயணிகள் 2026 முதல் அதிக கட்டணங்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும் நிலையில், பொதுமக்கள் இந்த மாற்றம் போக்குவரத்து செலவுகள் மீதான தாக்கத்தைப் பற்றி ஏற்கனவே கவலை தெரிவித்து வருகின்றனர்.





Leave a Reply