சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

பாரிஸில் கத்திக்குத்து தாக்குதல், பிரான்ஸ் தலைநகர் பாரிஸின் 17வது வட்டாரத்தில் உள்ள Porte de Clichy பகுதியில் திங்கள்கிழமை காலை இரு சமையலறைக் கத்திகளுடன் வந்த ஒருவர் மூன்று பெண்களை தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காயமடைந்தவர்கள் 19, 24 மற்றும் 36 வயதுடைய பெண்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களில் ஒருவர் கர்ப்பிணி என்றும் இருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!

WhatsApp / Call: +94 76 572 9042

பாரிஸில் கத்திக்குத்து தாக்குதல் போது அங்கிருந்த பொதுமக்கள் தைரியமாக தலையிட்டு தாக்குதலாளியை கட்டுப்படுத்தினர். பின்னர் விடுமுறையில் இருந்த ஒரு காவல்துறை அதிகாரி அவரை கைது செய்தார். இந்த நடவடிக்கையை பிரான்ஸ் உள்துறை அமைச்சர் பாராட்டியுள்ளார்.

சந்தேகநபர் கைது செய்யப்பட்டபோது ‘இதனைச் செய்யுமாறு அல்லாஹ் எனக்குக் கட்டளையிட்டார்‘ என மதம் தொடர்பான கூற்றுகளை கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் அவர் மனநிலை பாதிப்புடன் இருந்திருக்கலாம் என்பதால் இந்தச் சம்பவத்தை உடனடியாக பயங்கரவாதத் தாக்குதலாக வகைப்படுத்த முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேசிய பயங்கரவாத வழக்குரைஞர் அலுவலகம் நிலைமையை கண்காணித்து வருகிறது.

Leave a Reply

Recent posts

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்