இதில் பாரிஸ் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் மட்டும் 8,000 பாதுகாப்பு அதிகாரிகள் பணியில் ஈடுபடவுள்ளனர். போட்டி நடைபெறும் நாளில் பாரிஸில் பெரும் ரசிகர் திரள் கூடும் என எதிர்பார்க்கப்படுவதால் Champs-Élysées பகுதி பகலில் பொதுமக்கள் மற்றும் ரசிகர்களுக்காக நடைபாதை மயமாக மாற்றப்படும் என்றும் சட்டவிரோதச் செயல்கள் மற்றும் வன்முறைகளைத் தடுக்க விசேட பாதுகாப்பு திட்டங்கள் அமல்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு Paris SG அணி Champions League வெற்றி பெற்றபோது பாரிஸில் பல்வேறு வன்முறை சம்பவங்கள் மற்றும் சேதப்படுத்தல்கள் இடம்பெற்றதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. அப்போது 563 பேர் கைது செய்யப்பட்டிருந்ததுடன் நூற்றுக்கணக்கானோர் காவலில் வைக்கப்பட்டனர். இதன் பின்னணியிலேயே இம்முறை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளன.
போட்டியில் PSG வெற்றி பெற்றால் பாரிஸில் உள்ள Champ-de-Mars பகுதியில் வெற்றிக் கொண்டாட்டம் நடத்துவதற்கான வாய்ப்பும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காகவும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.





























