சவூதி தண்டனை, விதிக்கப்பட்டுள்ள இலங்கையரான சிவராசா அனோஜனை மனிதாபிமான அடிப்படையில் விடுவிப்பதற்காக இலங்கை அரசு உடனடி இராஜதந்திர நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட சர்வ மத ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் எந்த மதத்தையும் அதன் புனித ஆளுமைகளையும் அல்லது மத நம்பிக்கைகளையும் அவமதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயல் என்றும் அனைத்து மதங்களும் பரஸ்பர மரியாதை, மனித கண்ணியம் சகிப்புத்தன்மை மற்றும் சமாதானத்தை போதிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய சமூக ஊடக பதிவை சிவராசா அனோஜன் குறுகிய நேரத்திலேயே நீக்கி தனது தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பும் கோரியிருந்ததாக அறியப்படுவதாக ஒன்றியம் தெரிவித்துள்ளது.
அவரது குடும்பம் எதிர்நோக்கும் மனவேதனை மற்றும் வாழ்வாதார சிக்கல்களை கருத்தில் கொண்டு மனிதாபிமான அணுகுமுறையுடன் இலங்கை அரசு சவூதி அரேபிய அரசாங்கத்துடன் இராஜதந்திர ரீதியில் பேச்சுவார்த்தை நடத்தி வழங்கப்பட்டுள்ள தண்டனையில் தளர்வு அல்லது பொருத்தமான நிவாரணம் கிடைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் தாங்கள் வசிக்கும் நாடுகளின் சட்டங்கள், கலாசாரங்கள் மத நம்பிக்கைகள் மற்றும் சமூக மரபுகளை மதித்து குறிப்பாக சமூக வலைத்தளங்களை பொறுப்புடனும் விழிப்புணர்வுடனும் பயன்படுத்த வேண்டியது அவசியம் என்றும் இச்சம்பவம் மத நல்லிணக்கத்தையும் சமூக ஒற்றுமையையும் மேலும் வலுப்படுத்தும் பாடமாக அமைய வேண்டும் என்றும் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.













Leave a Reply