அவற்றில் 377 எலும்புக்கூடுகள் ஏற்கனவே அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து முன்னெடுக்கப்படும் அகழாய்வு பணிகளின் மூலம் மேலும் பல மனித எச்சங்கள் கண்டறியப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதுடன் இந்த அகழ்வுப் பணிகள் நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் நிபுணர்களின் பங்களிப்புடன் இடம்பெற்று வருகின்றன. செம்மணி புதைகுழி தொடர்பான இந்த கண்டுபிடிப்புகள் உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.
செம்மணி புதைகுழியில் எலும்புக்கூடுகள் 400ஐ கடந்தன
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகளின் 30ஆம் நாள் நடவடிக்கைகள் இன்று (21) நடைபெற்ற நிலையில் மேலும் 07 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன் புதிதாக 11 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் செம்மணி மனித புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள எலும்புக்கூடுகளின் மொத்த எண்ணிக்கை 405 ஆக உயர்ந்துள்ளது.






























