சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் தொடரும் நிலையில் 13ஆம் நாள் அகழ்வின்போது முக்கியமான புதிய சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அகழ்வில் ஒன்றன் மேல் ஒன்றாக அமைந்திருந்த இரு என்புக்கூடுகளும் சிறுவர்களுக்குச் சொந்தமானதாக நம்பப்படும் என்புக்கூடுகளும் மீட்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.

மொத்தமாக 8 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவற்றில் 5 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டதாகவும் மேலும் ஒரு என்புக்குவியல் கண்டறியப்பட்டு அதனை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். அதேவேளை ஒரு என்புக்கூட்டின் கால் பகுதி சேதமடைந்த நிலையில் காணப்பட்டதாகவும் அதன் காரணம் தொடர்பில் மேலதிக ஆய்வுகளின் பின்னரே உறுதியான தகவல் தெரிவிக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இன்றைய அகழ்வின்போதும் என்புகளுடன் செப்பு துண்டொன்று சான்றுப் பொருளாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நாள் அகழ்வில் நாணய வடிவிலான தாயத்து என நம்பப்படும் பொருள் ஒன்று மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading