குவைத்தில் நிறுவனங்கள் End of Service Benefits தராவிட்டால் என்ன செய்வது.
குவைத்தில் வேலை முடித்து வெளியேறும் போது அல்லது வேலை நிறுத்தப்படும்போது பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய “இண்டெம்னிட்டி” (End of Service Benefits) மிகவும் முக்கியமான உரிமையாகும்.
ஆனால் சில நிறுவனங்கள் இந்த பணத்தை தாமதப்படுத்துவது அல்லது வழங்காமல் இருப்பது போன்ற பிரச்சினைகள் அடிக்கடி ஏற்படுகின்றன. இதுபோன்ற சூழலில் பணியாளர்கள் தங்களுடைய சட்ட உரிமைகளை தெளிவாக அறிந்து செயல்படுவது அவசியம்.
குவைத் தொழிலாளர் சட்டத்தின் படி பணியாளர் வேலைவிட்டு வெளியேறும் விதம் (தன்னார்வ ராஜினாமா அல்லது நிறுவனம் நீக்கம்) அடிப்படையில் இண்டெம்னிட்டி கணக்கீடு மாறுபடும்.
பொதுவாக மாத சம்பளம் பெறும் பணியாளர்களுக்கு முதல் 5 ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு 15 நாட்கள் சம்பளம் மற்றும் அதன் பின் ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒரு மாத சம்பளம் வழங்கப்படும். ஆனால் ஒருவர் தன்னார்வமாக ராஜினாமா செய்தால், அவருக்கு முழு தொகை கிடைக்காமல் 1/2 அல்லது 2/3 அளவாக குறைக்கப்படலாம்.
உதாரணம்
ஒரு பணியாளர் மாத சம்பளம் 100 KWD (குவைத் தினார்) என்று வைத்துக் கொள்வோம். அவர் 7 ஆண்டுகள் வேலை செய்துள்ளார்.
முதல் 5 ஆண்டுகளுக்கான கணக்கு
- ஒரு ஆண்டுக்கு 15 நாட்கள் சம்பளம்
- 15 நாட்கள் சம்பளம் = (100 ÷ 30) × 15 = 50 KWD
- 5 ஆண்டுகள் = 50 × 5 = 250 KWD
அடுத்த 2 ஆண்டுகள்
- ஒரு ஆண்டுக்கு 1 மாத சம்பளம் = 100 KWD
- 2 ஆண்டுகள் = 100 × 2 = 200 KWD
மொத்த இண்டெம்னிட்டி: 250 + 200 = 450 KWD
ராஜினாமா செய்தால்
இவர் தன்னார்வமாக வேலை விட்டு சென்றால்
- அவர் பெறும் தொகை முழுவதும் கிடைக்காது
- உதாரணமாக 2/3 மட்டும் கிடைக்கும் என்றால்:
👉 450 × 2/3 = 300 KWD
ஒரு பணியாளர் நிறுவனத்தால் காரணமின்றி நீக்கப்பட்டால் அவருக்கு முழு இண்டெம்னிட்டி பெற உரிமை உண்டு. ஆனால் மோசடி ஒழுங்கு மீறல் நிறுவனத்திற்கு பெரிய சேதம் போன்ற குற்றங்களுக்காக நீக்கம் செய்யப்பட்டால் இண்டெம்னிட்டி முழுவதுமோ அல்லது பகுதியோ கிடைக்காமல் போகலாம்.
வேலை முடித்த பிறகு பணியாளர் பெற வேண்டிய இறுதி தொகையில் இண்டெம்னிட்டி மட்டும் அல்லாமல் நிலுவையில் உள்ள சம்பளம், பயன்படுத்தாத விடுமுறை பணம் விமான டிக்கெட் (ஒப்பந்தத்தில் இருந்தால்) போன்றவையும் அடங்கும். எனவே இறுதி கணக்கை (final settlement) சரியாக சரிபார்க்க வேண்டும்.
நிறுவனம் இண்டெம்னிட்டி பணத்தை வழங்காமல் இருந்தால் முதலில் அமைதியான முறையில் (எழுத்து மூலம்) கோரிக்கை விடுக்க வேண்டும். அதிலும் தீர்வு கிடைக்காவிட்டால் தொழிலாளர் அமைச்சகத்தின் (Ministry of Social Affairs and Labor) அலுவலகத்தில் புகார் அளிக்கலாம்.
தேவையான ஆவணங்கள்
தேவையெனில் சக ஊழியர் சாட்சிகள் / கூடுதல் ஆதாரங்கள்
பாஸ்போர்ட் நகல்
Civil ID நகல்
வேலை விசா / Residence permit (Iqama)
வேலை ஒப்பந்தம் (Employment Contract)
சம்பள ரசீதுகள் (Salary slips)
வங்கி கணக்கு ஸ்டேட்மெண்ட் (Salary credit proof)
ராஜினாமா கடிதம் (Resignation letter) / நீக்கம் கடிதம் (Termination letter)
Final settlement ஆவணம் (இருந்தால்)
HR மின்னஞ்சல்கள் / WhatsApp / SMS தொடர்புகள்
சம்பளம் அல்லது இண்டெம்னிட்டி கோரிய கடிதங்கள்
Attendance / வேலை நேர பதிவுகள்
விடுமுறை பதிவுகள்
அங்கு சமரசம் தோல்வியடைந்தால் வழக்கு தொழிலாளர் நீதிமன்றத்திற்கு அனுப்பப்படும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தேவையான ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றம் பணியாளர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்குகிறது.
மேலும் நிறுவனம் பணம் செலுத்த மறுத்தால் நீதிமன்றம் கடுமையான நடவடிக்கைகளையும் எடுக்கலாம். இதில் நிறுவனத்தின் வங்கி கணக்குகளை முடக்கம் செய்வது சொத்துகளை பறிமுதல் செய்வது உரிமம் புதுப்பிப்பை தடை செய்வது போன்றவை அடங்கும்.
முக்கியமாக முழு இண்டெம்னிட்டி தொகை கிடைக்காமல் “final settlement” ஆவணத்தில் கையெழுத்திடக் கூடாது. அனைத்து ஆதார ஆவணங்களையும் பாதுகாப்பாக வைத்திருப்பது மிகவும் முக்கியம்.
இவ்வாறு குவைத்தில் நிறுவனம் இண்டெம்னிட்டி வழங்காமல் இருந்தாலும் பணியாளர்களுக்கு சட்டரீதியான பாதுகாப்பு உள்ளது. என்பதனை நீங்கள் கட்டாயம் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.





Leave a Reply