தொழில்நுட்ப உலகில் பெரிய மாற்றமாக Samsung தனது “Samsung Messages” மெசேஜிங் ஆப்பை 2026 ஜூலை மாதத்திலிருந்து முழுமையாக நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் பல ஆண்டுகளாக Galaxy போன்களில் பயன்படுத்தப்பட்ட இந்த இயல்புநிலை (default) மெசேஜ் ஆப் முடிவுக்கு வருகிறது.
இந்த மாற்றத்திற்குப் பிறகு பயனர்கள் அனைவரும் Google Messages ஆப்பிற்கு மாற வேண்டும் என்று நிறுவனம் பரிந்துரைக்கிறது. புதிய Galaxy சாதனங்களில் ஏற்கனவே Google Messages முன்னிருப்பாக (pre-installed) வழங்கப்பட்டு வருகிறது.
Samsung தெரிவித்ததாவது இந்த மாற்றம் Android மொபைல் சாதனங்களில் ஒரே மாதிரியான messaging அனுபவத்தை வழங்கும் நோக்கத்துடன் செய்யப்படுகிறது. Google Messages மூலம் RCS (Rich Communication Services) AI அம்சங்கள் spam பாதுகாப்பு போன்ற மேம்பட்ட வசதிகள் கிடைக்கும்.
மேலும் 2026 ஜூலைக்கு பிறகு Samsung Message மூலம் சாதாரணமாக SMS அனுப்ப முடியாது அவசர எண்களுக்கு மட்டும் செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் Android 11 அல்லது அதற்கு கீழ் இயங்கும் பழைய சாதனங்களுக்கு இந்த மாற்றம் உடனடியாக பாதிப்பை ஏற்படுத்தாது.
இந்த முடிவு Samsung நிறுவனத்தின் மென்பொருள் துறையில் முக்கிய மாற்றமாக பார்க்கப்படுகிறது மேலும் Android உலகில் Google Messages முக்கியமான இடத்தைப் பெறும் சூழல் உருவாகியுள்ளது.



























