பிரான்சின் முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான SFR நிறுவனத்தை வாங்குவதற்காக Bouygues Telecom, Free (Iliad Group) மற்றும் Orange ஆகிய மூன்று பெரிய telecom நிறுவனங்கள் இணைந்து €20.35 பில்லியன் மதிப்பிலான புதிய ஒப்பந்த முன்மொழிவை சமர்ப்பித்துள்ளன. இந்த ஒப்பந்தம் தற்போது exclusive negotiation நிலையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
SFR நிறுவனத்தின் parent company ஆன Altice France கடந்த சில ஆண்டுகளாக மிகப்பெரிய கடன் சுமையையும் வாடிக்கையாளர் இழப்பையும் சந்தித்து வந்த நிலையில், நிறுவனத்தை முழுமையாக அல்லது பகுதி அடிப்படையில் விற்பனை செய்வது குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இதற்கு முன் 2025 இல் €17 பில்லியன் அளவிலான முன்மொழிவு நிராகரிக்கப்பட்டிருந்தாலும் தற்போது அதிகரிக்கப்பட்ட €20.35 பில்லியன் ஒப்பந்தம் குறித்து முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் நிறைவேறினால் சுமார் 25 மில்லியன் SFR mobile மற்றும் இணைய வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. தற்போதைய தகவல்களின் படி SFR வாடிக்கையாளர்கள் மற்றும் சேவைகள் மூன்று நிறுவனங்களுக்கும் பின்வரும் விகிதத்தில் பகிரப்படலாம்:
- Bouygues Telecom – 42%
- Free (Iliad Group) – 31%
- Orange – 27%
என்ற அளவில் assets மற்றும் வாடிக்கையாளர்கள் பகிரப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.






























