இந்த தடை குவைத்தின் அனைத்து சாலைகள் மற்றும் பகுதிகளிலும் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை Kuwait கடும் கோடை வெப்பத்தில் வெளிப்புறத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் Delivery ஓட்டுநர்களை வெப்பத்தால் ஏற்படும் உடல்நல ஆபத்துகளிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளது.
இதே நேரத்தில் வெளிப்புற வேலைகளுக்கும் (Outdoor Work) 11 மணி முதல் 4 மணி வரை வேலை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குவைத் அதிகாரிகள் கூறுகையில் இந்த விதிமுறையை மீறும் நிறுவனங்கள் மற்றும் Delivery சேவை வழங்குநர்களுக்கு அபராதம் அனுமதி நிபந்தனை மீறல் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் என எச்சரித்துள்ளனர். விதிமுறைகள் முழுமையாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க திடீர் ஆய்வுகளும் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

































