சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

போலந்து செல்ல இலங்கை குடிமக்களுக்கு பொதுவாக ஷெங்கன் விசா அவசியமாகும். போலந்து ஷெங்கன் பகுதியில் உள்ள நாடாக இருப்பதால் போலந்து விசா மூலம் பல ஐரோப்பிய நாடுகளுக்கும் பயணம் செய்ய முடியும்.

தங்கும் காலப்பகுதி

நீங்கள் Schengen விசாவுடன் ஐரோப்பிய Schengen நாடுகளில் ஒரு 180 நாள் காலப்பகுதிக்குள் மொத்தமாக 90 நாட்கள் மட்டுமே தங்க அனுமதிக்கப்படுகிறீர்கள் என்பதைக் குறிக்கிறது.

இந்த 180 நாட்கள் என்பது ஒரு நிரந்தர காலண்டர் காலம் அல்ல நீங்கள் Schengen பகுதியில் இருக்கும் ஒவ்வொரு நாளும் பின்னோக்கி 180 நாட்கள் கணக்கிடப்படும். அந்த காலப்பகுதிக்குள் நீங்கள் தங்கியிருந்த நாட்களின் மொத்தம் 90 நாட்களை மீறக்கூடாது.

உதாரணமாக நீங்கள் Poland அல்லது மற்ற Schengen நாடுகளில் தொடர்ந்து 90 நாட்கள் தங்கி வெளியேறினால் மீண்டும் உடனே 90 நாட்களுக்கு வர முடியாது புதிய நாட்கள் கிடைக்க சில காலம் Schengen பகுதிக்கு வெளியே இருக்க வேண்டும். இந்த விதி Schengen நாடுகளில் நீண்டகாலமாக அனுமதியின்றி தங்குவதைத் தடுக்கும் நோக்கத்துடன் அமல்படுத்தப்பட்டுள்ளது.

Visa கட்டணம்

VFS சேவை கட்டணமாக 18 யூரோ சமமான தொகை வசூலிக்கப்படுகிறது. விசா மறுக்கப்பட்டாலும் கட்டணம் திருப்பி வழங்கப்படாது.

Table displaying C-Type Visa information including countries, visa types, and fees in euros.

நீங்கள் சமர்ப்பிக்கும் விசா விண்ணப்ப படிவத்தில் உள்ள அனைத்து தகவல்களும் முழுமையாகவும் உண்மையாகவும் தவறுகள் இல்லாமலும் நிரப்பப்பட்டிருக்க வேண்டும்.

படிவத்தில் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் (பெயர், பிறந்த தேதி, முகவரி, பாஸ்போர்ட் விவரங்கள்) பயண விவரங்கள் (போகும் தேதி, திரும்பும் தேதி, தங்கும் இடம்) வேலை அல்லது தொழில் தகவல்கள் போன்ற அனைத்தையும் சரியாக எழுத வேண்டும்.

எந்த தகவலும் காலியாக விடப்படக் கூடாது தெரியாத இடங்களில் “N/A” என்று குறிப்பிடலாம். நீங்கள் வழங்கும் தகவல்கள் உங்கள் பாஸ்போர்ட் மற்றும் மற்ற ஆவணங்களுடன் பொருந்த வேண்டும் தவறான அல்லது பொய்யான தகவல்கள் விசா நிராகரிக்கப்பட வாய்ப்பு அதிகம்.

படிவத்தை நிரப்பும் போது எழுத்துப்பிழைகள் இல்லாமல் கவனமாக நிரப்ப வேண்டும். சில சமயங்களில் online-ஆகவும் அல்லது கைஎழுத்தில் (handwritten) நிரப்ப வேண்டியிருக்கலாம் எது இருந்தாலும் தெளிவாகவும் வாசிக்க எளிதாகவும் இருக்க வேண்டும்.

கையொப்பம் இல்லாமல் விண்ணப்பம் செல்லாது. இவ்வாறு சரியாக நிரப்பப்பட்ட விண்ணப்ப படிவம் உங்கள் விசா செயல்முறையின் முதல் மற்றும் முக்கியமான படியாகும்.

விசாவுக்கு எப்போது விண்ணப்பிக்க வேண்டும்?

பயணம் தொடங்குவதற்கு குறைந்தது 30 நாட்களுக்கு (New Update 15 நாட்களுக்கு) முன்பும் 6 மாதங்களுக்கு முன்னதாகவும் விசா விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

விசாவுக்கு எப்படி விண்ணப்பிப்பது?

சுவிஸ் மத்திய வெளியுறவுத் துறை நடத்திய பொதுவான கொள்முதல் செயல்முறையின் பின்னர் விசா விண்ணப்ப மையங்கள் சேவைகளை நடத்துவதற்கான புதிய ஒப்பந்தம் VFS குளோபல் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஒப்பந்தம் ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது.

புதிய ஒப்பந்தம் அமலுக்கு வரும் நிலையில் சில முக்கிய மாற்றங்களும் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

இனி விசா நியமனம் பதிவு செய்வதற்கு முன் விண்ணப்பதாரர்கள் விசா விண்ணப்ப படிவம்ஐ ஆன்லைன் மூலம் கட்டாயமாக நிரப்ப வேண்டும்.

VFS Global மூலம் விசா விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளும் செயல்முறை எந்த தடையும் இல்லாமல் தொடரும். மேலும் ஜூலை 1க்கு முன் பதிவு செய்யப்பட்ட அனைத்து நியமனங்களும் செல்லுபடியாகும்.

புதிய VFS சேவை கட்டணம் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும். அவை VFS Global அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும். மேலும் தகவல்களுக்கு VFS Global இணையதளத்தில் உள்ள தற்போதைய தொடர்பு சேனல்கள் மூலமாக தொடர்ந்து தொடர்புகொள்ளலாம்.

தேவையான முக்கிய ஆவணங்கள்

போலந்து Short-Term Schengen Visa “C” விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித்து முழுமையான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர் முதலில் முழுமையாக பூர்த்தி செய்து கையொப்பமிட்ட விசா விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம்

3.5 × 4.5 செ.மீ அளவிலான சமீபத்திய நிறப் புகைப்படமும் அவசியம். அந்த புகைப்படம் வெள்ளை பின்னணியுடன் தெளிவாக எடுக்கப்பட்டிருக்க வேண்டும் மற்றும் 6 மாதங்களுக்கு மேல் பழையதாக இருக்கக்கூடாது. முகம் முழுமையாக தெளிவாக காணப்பட வேண்டும்.

விண்ணப்பதாரரின் கடவுச்சீட்டு

கடந்த 10 ஆண்டுகளுக்குள் வழங்கப்பட்டதாகவும், பயணம் முடிந்து திரும்பும் தேதியிலிருந்து குறைந்தது 3 மாதங்கள் செல்லுபடியாகவும் இருக்க வேண்டும். அதில் குறைந்தது இரண்டு காலிப் பக்கங்கள் இருக்க வேண்டும். தனிப்பட்ட தகவல்கள் உள்ள பக்கங்களின் நகல்களும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

மருத்துவ காப்பீடு

அனைத்து Schengen நாடுகளிலும் செல்லுபடியாகும் குறைந்தது 30,000 யூரோ மதிப்புள்ள மருத்துவ காப்பீடும் கட்டாயமாகும். இந்த காப்பீடு அவசர சிகிச்சை மருத்துவமனையில் அனுமதி, உடல்நலக் காரணங்களால் திரும்பிச் செல்ல வேண்டிய நிலை போன்ற அனைத்தையும் உள்ளடக்க வேண்டும். (இதனுடைய பெறுமதி கிட்டத்தட்ட 450 யூரோ விற்குள் உள்ளடங்கும்)

விசாக்களின் நகல்கள் (இருந்தால் மட்டும்)

கடைசி 3 ஆண்டுகளில் பெற்றிருந்த Schengen அல்லது தேசிய விசாக்களின் நகல்கள் நுழைவு மற்றும் வெளியேற்ற முத்திரைகள் உள்ள பக்கங்களின் நகல்கள்.

பயணத் திட்டம்

பெல்ஜியம் அல்லது பிற Schengen நாடுகளுக்குச் செல்லும் போது நீங்கள் எந்த தேதியில் எங்கு செல்லப் போகிறீர்கள் என்பதை தெளிவாக காட்ட வேண்டும்.

இது நீங்கள் உண்மையில் சுற்றுலா நோக்கில் செல்கிறீர்களா, எவ்வளவு நாட்கள் தங்கப் போகிறீர்கள், எந்த நாடுகளில் தங்க உள்ளீர்கள், திரும்பி வர திட்டமிட்டுள்ளீர்களா என்பதை புரிந்துகொள்ள உதவுகிறது.

Travel Itinerary-ல் பயண தொடக்க தேதி, எந்த நாட்டிற்கு முதலில் செல்கிறீர்கள், ஹோட்டல் தங்கும் விவரங்கள், நகரங்கள் / நாடுகள் மாற்றம், விமான அல்லது ரயில் முன்பதிவு மற்றும் திரும்பும் தேதி கட்டாயம் இருக்க வேண்டும்

உதாரணம்

தேதிநாடு / நகரம்செயல்
10 June 2026Paris, Franceவருகை
12 June 2026Brussels, Belgiumஹோட்டல் தங்கல்
15 June 2026Amsterdam, Netherlandsசுற்றுலா
18 June 2026Parisதிரும்பும் விமானம்

தங்கும் இடத்தை உறுதிப்படுத்தும் ஆதாரம் (hotel booking / invitation letter / accommodation declaration)

ஹோட்டல் முன்பதிவு உறுதிப்படுத்தல் ஆவணங்கள்.

உங்கள் சமூக மற்றும் தொழில்நிலை பற்றிய ஆதாரங்கள் (job letter, business proof போன்றவை)

நீங்கள் உங்கள் நாட்டில் நிலையான வாழ்க்கை மற்றும் பொறுப்புகள் கொண்டவர் என்பதை நிரூபிக்கும் முக்கியமான ஆவணங்கள் இதன் மூலம் நீங்கள் விசா காலம் முடிந்தவுடன் மீண்டும் உங்கள் நாட்டிற்கு திரும்புவீர்கள் என்பதை தூதரகம் உறுதிப்படுத்துகிறது.

வேலை செய்பவர்கள் (click here)

நிறுவனத்திலிருந்து வழங்கப்படும் வேலை உறுதி கடிதம் (Employment Letter) கடந்த 3 முதல் 6 மாத சம்பள சீட்டுகள் மற்றும் விடுப்பு அனுமதி கடிதம் ஆகியவை சமர்ப்பிக்க வேண்டும்.

தொழில் நடத்துபவர்கள் (click here)

உங்கள் வணிக பதிவு சான்று (Business Registration Certificate) வரி செலுத்திய ஆவணங்கள் (Tax Returns) மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் (Bank Statements) முக்கியமானவை.

மாணவர்கள் (click here)

படிக்கும் பள்ளி அல்லது கல்லூரியிலிருந்து Bonafide Certificate மற்றும் மாணவர் அடையாள அட்டை வழங்க வேண்டும்.

வேலை இல்லாதவர்கள் அல்லது வீட்டு பொறுப்பில் இருப்பவர்கள் (click here)

சொத்து ஆவணங்கள், குடும்ப உறவு சான்றுகள் போன்றவை சமர்ப்பிக்கலாம்.

இவ்வாறான அனைத்து ஆவணங்களும் சேர்ந்து, உங்கள் சமூக மற்றும் பொருளாதார நிலைமை உறுதியாக உள்ளது என்பதை காட்டி விசா பெறுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும்.

போதுமான நிதி இருப்பை நிரூபிக்கும் ஆவணம்

கடந்த 3 மாத வங்கி கணக்கு விபரங்கள் சம்பள சீட்டுகள் அல்லது வருமான வரி ஆவணங்கள் மூலம் போதுமான நிதி வசதி இருப்பதை நிரூபிக்க வேண்டும்.

“மீண்டும் தாய்நாட்டிற்கு திரும்பும் நோக்கம்” முக்கியம்

விசா அதிகாரிகள் விண்ணப்பதாரரின் “Migration Risk” அல்லது சட்டவிரோதமாக தங்கிவிடும் அபாயத்தை மிக முக்கியமாக மதிப்பீடு செய்கிறார்கள். இதனால் விண்ணப்பதாரர்கள் தங்கள் குடும்ப பிணைப்புகள், சொத்து ஆதாரங்கள், நிரந்தர வருமான ஆதாரங்கள், வேலை நிலைத்தன்மை

போன்ற ஆவணங்களை அதிகளவில் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் பயணம் முடிந்ததும் விண்ணப்பதாரர் Schengen பகுதியை விட்டு வெளியேறுவார் என்பதை நிரூபிக்க உதவும்.

தவறான ஆவணங்கள் சமர்ப்பித்தால் Schengen நாடுகளுக்குள் நுழைவு தடை விதிக்கப்படலாம். மேலும், விசா கிடைத்தாலும் Schengen எல்லையில் இறுதி அனுமதி எல்லை அதிகாரிகளின் முடிவைப் பொறுத்தே இருக்கும். தேவையானால் தூதரகம் கூடுதல் ஆவணங்களையும் கேட்கலாம்.

நேர்முக நேரம் (Appointment) பெறுவது முழுமையாக VFS Global இணையதளம் மூலமாக மட்டுமே செய்யப்படும்.

சந்திப்புக்கு முன்பதிவு செய்யுங்கள் (Make an appointment)

Appointment-ஐ confirm செய்ய வேண்டும் Confirm செய்த பிறகு வரும் confirmation letter-ஐ download செய்து print எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அந்த appointment நாளில் Colombo-வில் உள்ள VFS Visa Application Centre-க்கு நேரத்திற்கு முன் சென்று உங்கள் அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் அங்கு உங்கள் biometric details (fingerprint மற்றும் photo) எடுக்கப்படும். Appointment இல்லாமல் visa விண்ணப்பிக்க முடியாது.

அல்லது இதன் மேலதிக தெளிவுக்கு நேரடியாக பெல்ஜியம் (சுவிட்சர்லாந்து) தூதரகத்தை அணுகவும். கீழ்க்கண்ட முகவரியில்

Embassy of Switzerland
63, Srimath R.G. Senanayake Mawatha (Gregory’s Road)
Colombo 7
Sri Lanka

Phone
Headquarters +94 11 269 51 17

Fax
Headquarters +94 11 269 51 76
International cooperation +94 11 268 83 48

Headquarters colombo@eda.admin.ch
Visa services colombo.visa@eda.admin.ch

Website Headquarters 

Postal address
Embassy of Switzerland
P.O. Box 342
Colombo
Sri Lanka

Schengen Visa கட்டணம் – முக்கிய குறிப்பாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்

போலந்து உட்பட Schengen நாடுகளுக்கான குறுகிய கால (up to 90 days) சுற்றுலா விசாவிற்கு € 90.00 கட்டணம் செலுத்த வேண்டும் என்பது மிகவும் முக்கியமான தகவல் ஆகும்.

இந்த கட்டணம் பெரியவர்கள் (adults)க்கு பொதுவாக பொருந்தும். விண்ணப்பிக்கும் போது இந்த தொகையை சரியாக செலுத்த வேண்டும் சில சமயங்களில் VFS Global மூலம் local currency-ஆக (Sri Lankan Rupees) மாற்றி வசூலிக்கப்படலாம்.

visa fee பொதுவாக non-refundable ஆக இருக்கும் அதாவது உங்கள் விசா நிராகரிக்கப்பட்டாலும் பணம் திரும்ப கிடைக்காது அதனால் விண்ணப்பிக்கும் முன் அனைத்து ஆவணங்களையும் சரியாக தயார் செய்து சமர்ப்பிப்பது மிகவும் அவசியம்.

இந்த €90 கட்டணம் என்பது Schengen visa விண்ணப்பத்தில் முக்கியமான கட்டாய செலவாக இருப்பதால் இதை நீங்கள் மறக்காமல் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்