Schengen பகுதி யில் 90 நாள் விதியை மீறி தங்கினால் ..?
ஷெங்கன் பகுதி யின் 90/180 நாள் விதியை மீறி பிரான்ஸ் அல்லது பிற ஐரோப்பிய நாடுகளில் கூடுதல் நாட்கள் தங்குவது அபராதம் எதிர்கால விசா சிக்கல் நாட்டைவிட்டு வெளியேற்றம் போன்ற கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். Schengen பகுதிக்கு விசா இல்லாமல் அல்லது Short-Stay Visa மூலம் செல்லும் நபர்கள் எந்த 180 நாட்களுக்குள் அதிகபட்சம் 90 நாட்கள் மட்டுமே தங்க அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த 90 நாட்கள் தொடர்ச்சியாகவோ அல்லது பல முறை பயணம் செய்தும் பயன்படுத்தப்படலாம்.
உதாரணமாக
- ஜனவரி முதல் மார்ச் வரை 60 நாட்கள் தங்கினால்,
- அடுத்த 180 நாள் கணக்கில் உங்களுக்கு மேலும் 30 நாட்கள் மட்டுமே இருக்கும்.
90 நாட்களை மீறி தங்கினால் அபராதம் விதிக்கப்படலாம்
பிரான்ஸ் சட்டப்படி Schengen காலவரம்பை மீறி தங்கினால் €198 – €3750 வரை அபராதம் விதிக்கப்படலாம். சில சந்தர்ப்பங்களில் இது அதிகரிக்கவும் முடியும். மற்ற சில ஐரோப்பிய நாடுகளில்
- ஜெர்மனி – €1000 வரை
- பெல்ஜியம் – €6000 வரை
- ஸ்பெயின் – €10,000 வரை
ஒருமுறை Overstay பதிவு செய்யப்பட்டால்
- எதிர்கால Schengen Visa விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படலாம்
- Long-Stay Visa அல்லது Residence Permit பெற சிக்கல் ஏற்படலாம்
- Border control இல் கூடுதல் விசாரணைகள் நடக்கலாம்.
கடுமையான Overstay அல்லது சட்டவிரோத வேலை போன்ற காரணங்கள் இருந்தால் 1 முதல் 5 ஆண்டுகள் வரை Schengen நுழைவு தடை விதிக்கப்படலாம், Schengen Information System (SIS) இல் உங்கள் விவரங்கள் பதிவு செய்யப்படலாம்.
வெளியேற்ற உத்தரவு (OQTF)
பிரான்சில் சட்டபூர்வ அனுமதி இல்லாமல் தங்குவதாக கண்டறியப்பட்டால் OQTF (Obligation de Quitter le Territoire Français) வழங்கப்படலாம், குறிப்பிட்ட காலத்திற்கு நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்படலாம், சில நேரங்களில் நாடுகடத்தப்படும் நடவடிக்கையும் இருக்கலாம்.
ஒரு அல்லது இரண்டு நாள் தவறுதலான Overstay இருந்தால்?
சிறிய அளவு Overstay இருந்தாலும் அது கணினியில் பதிவு செய்யப்படும். தற்போது EU நுழைவு/வெளியேறு அமைப்பு (EES) மூலம் எல்லை கடக்கும் அனைவரின் நுழைவு/வெளியேறு தானாக கண்காணிக்கப்படுகிறது.
ஆனால் போன்ற விதிவிலக்கான சூழ்நிலைகள் இருந்தால் அதிகாரிகள் தளர்வு வழங்கலாம். ஆதார ஆவணங்கள் அவசியம். போன்ற விதிவிலக்கான சூழ்நிலைகள் இருந்தால் அதிகாரிகள் தளர்வு வழங்கலாம். ஆதார ஆவணங்கள் அவசியம்.
- உடல்நல பிரச்சினை
- விமான ரத்து
- குடும்ப அவசரம்
கூடுதல் நாட்கள் தங்க அனுமதி, சில அவசர சூழ்நிலைகளில் Prefecture மூலம் Autorisation Provisoire de Séjour என்ற தற்காலிக அனுமதி கோர முடியும். ஆனால் இது விசேஷ காரணங்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.
- மருத்துவ அவசரம்
- குடும்ப அவசரம்
- Force majeure
90 நாட்களுக்கு மேலாக பிரான்சில் தங்க விரும்பினால் Long-Stay Visa (Visa de Long Séjour) அல்லது Residence Permit (Titre de séjour) முன்கூட்டியே பெற வேண்டும்.
நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்
- உங்கள் ஷெங்கன் நாட்கள் எப்போதும் கணக்கிட்டு பயணம் செய்யுங்கள்.
- எல்லை நுழைவு மற்றும் வெளியேறும் முத்திரை சரியாக உள்ளதா என உறுதிப்படுத்துங்கள்.
- Overstay ஏற்பட்டால் மறைவதை விட உடனே சட்ட ஆலோசனை பெறுவது நல்லது.
- சட்டவிரோத வேலை அல்லது போலி ஆவணங்கள் பயன்படுத்துவது மிகவும் கடுமையான குற்றமாக கருதப்படுகிறது.





Leave a Reply