பெல்ஜியத்துக்கு (Belgium) 90 நாட்கள் வரை சுற்றுலா நோக்கில் பயணம் செய்ய விரும்புபவர்கள் Schengen Visa பெற வேண்டும். இந்த விசா மூலம் நீங்கள் பெல்ஜியத்துடன் சேர்த்து மற்ற Schengen நாடுகளுக்கும் பயணம் செய்யலாம். இந்த விசாவிற்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் மற்றும் கட்டணம் குறித்து கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

விசா வைத்திருக்க வேண்டிய மூன்றாம் நாடுகளின் பட்டியல்.

Screenshot of visa application portal for Belgium, highlighting the 'New application' button.

நீங்கள் சமர்ப்பிக்கும் விசா விண்ணப்ப படிவத்தில் உள்ள அனைத்து தகவல்களும் முழுமையாகவும் உண்மையாகவும் தவறுகள் இல்லாமலும் நிரப்பப்பட்டிருக்க வேண்டும்.

படிவத்தில் உங்கள் தனிப்பட்ட தகவல்கள் (பெயர், பிறந்த தேதி, முகவரி, பாஸ்போர்ட் விவரங்கள்) பயண விவரங்கள் (போகும் தேதி, திரும்பும் தேதி, தங்கும் இடம்) வேலை அல்லது தொழில் தகவல்கள் போன்ற அனைத்தையும் சரியாக எழுத வேண்டும்.

எந்த தகவலும் காலியாக விடப்படக் கூடாது தெரியாத இடங்களில் “N/A” என்று குறிப்பிடலாம். நீங்கள் வழங்கும் தகவல்கள் உங்கள் பாஸ்போர்ட் மற்றும் மற்ற ஆவணங்களுடன் பொருந்த வேண்டும் தவறான அல்லது பொய்யான தகவல்கள் விசா நிராகரிக்கப்பட வாய்ப்பு அதிகம்.

படிவத்தை நிரப்பும் போது எழுத்துப்பிழைகள் இல்லாமல் கவனமாக நிரப்ப வேண்டும். சில சமயங்களில் online-ஆகவும் அல்லது கைஎழுத்தில் (handwritten) நிரப்ப வேண்டியிருக்கலாம் எது இருந்தாலும் தெளிவாகவும் வாசிக்க எளிதாகவும் இருக்க வேண்டும்.

கையொப்பம் இல்லாமல் விண்ணப்பம் செல்லாது. இவ்வாறு சரியாக நிரப்பப்பட்ட விண்ணப்ப படிவம் உங்கள் விசா செயல்முறையின் முதல் மற்றும் முக்கியமான படியாகும்.

விசாவுக்கு எப்போது விண்ணப்பிக்க வேண்டும்?

பயணம் தொடங்குவதற்கு குறைந்தது 30 நாட்களுக்கு (New Update 15 நாட்களுக்கு) முன்பும் 6 மாதங்களுக்கு முன்னதாகவும் விசா விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

சில காலகட்டங்களில் (விடுமுறை காலங்கள் பள்ளி விடுமுறைகள் போன்றவை) சந்திப்புக் காலமும் தேர்வுக் காலமும் பொதுவாக நீண்டதாக இருக்கும். எனவே விசா விண்ணப்பத்தை முடிந்தவரை முன்கூட்டியே சமர்ப்பியுங்கள்.

விசாவுக்கு எப்படி விண்ணப்பிப்பது?

விண்ணப்பப் படிவம் பொதுவாக, கூட்டாட்சி வெளியுறவு வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு ஒத்துழைப்புக்கான பொதுச் சேவையால் நிர்வகிக்கப்படும் http://visaonweb.diplomatie.be/ என்ற இணையதளத்தில் ஆன்லைனில் பூர்த்தி செய்யப்படுகிறது.

கோப்பு பொதுவாக முன் அனுமதி பெற்று சமர்ப்பிக்கப்படுகிறது. அனைத்து நடைமுறைத் தகவல்களுக்கும் வெளிச் சேவை வழங்குநரின் இணையதளத்தைப் பார்க்கப் பரிந்துரைக்கப்படுகிறது.

விசா விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கும் முன் அனுமதி பெறுவதற்கும் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறையானது பெல்ஜிய தூதரகம் அல்லது துணைத் தூதரகம் சார்பாக விசா விண்ணப்பத்தைப் பெறும் வெளிச் சேவை வழங்குநரின் (VFS Global அல்லது TLS Contact) இணையதளத்தில் விளக்கப்பட்டுள்ளது.

தேவையான முக்கிய ஆவணங்கள்

செல்லுபடியாகும் பாஸ்போர்ட் (விசா காலாவதியான பின்னரும் குறைந்தது 3 மாதங்கள் செல்லுபடியாக இருக்க வேண்டும்)

விசா விண்ணப்பிக்க முதலில் குறைந்தது பயண முடிவுத் தேதிக்குப் பிறகும் 3 மாதங்கள் செல்லுபடியாக இருக்கும் தேசிய பாஸ்போர்ட் அவசியம். அதோடு கையொப்பமிடப்பட்ட விண்ணப்பப் படிவமும்–

சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம்

5×3 செ.மீ நிறப் புகைப்படமும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

இதனுடன் கீழ்க்கண்ட ஆவணங்களும் கட்டாயமாக கோரப்படுகின்றன

பயணத் திட்டம்

பெல்ஜியம் அல்லது பிற Schengen நாடுகளுக்குச் செல்லும் போது நீங்கள் எந்த தேதியில் எங்கு செல்லப் போகிறீர்கள் என்பதை தெளிவாக காட்ட வேண்டும்.

இது நீங்கள் உண்மையில் சுற்றுலா நோக்கில் செல்கிறீர்களா, எவ்வளவு நாட்கள் தங்கப் போகிறீர்கள், எந்த நாடுகளில் தங்க உள்ளீர்கள், திரும்பி வர திட்டமிட்டுள்ளீர்களா என்பதை புரிந்துகொள்ள உதவுகிறது.

Travel Itinerary-ல் பயண தொடக்க தேதி, எந்த நாட்டிற்கு முதலில் செல்கிறீர்கள், ஹோட்டல் தங்கும் விவரங்கள், நகரங்கள் / நாடுகள் மாற்றம், விமான அல்லது ரயில் முன்பதிவு மற்றும் திரும்பும் தேதி கட்டாயம் இருக்க வேண்டும்

உதாரணம்

தேதிநாடு / நகரம்செயல்
10 June 2026Paris, Franceவருகை
12 June 2026Brussels, Belgiumஹோட்டல் தங்கல்
15 June 2026Amsterdam, Netherlandsசுற்றுலா
18 June 2026Parisதிரும்பும் விமானம்

தங்கும் இடத்தை உறுதிப்படுத்தும் ஆதாரம் (hotel booking / invitation letter / accommodation declaration)

ஹோட்டல் முன்பதிவு உறுதிப்படுத்தல் ஆவணங்கள்.

உங்கள் சமூக மற்றும் தொழில்நிலை பற்றிய ஆதாரங்கள் (job letter, business proof போன்றவை)

நீங்கள் உங்கள் நாட்டில் நிலையான வாழ்க்கை மற்றும் பொறுப்புகள் கொண்டவர் என்பதை நிரூபிக்கும் முக்கியமான ஆவணங்கள் இதன் மூலம் நீங்கள் விசா காலம் முடிந்தவுடன் மீண்டும் உங்கள் நாட்டிற்கு திரும்புவீர்கள் என்பதை தூதரகம் உறுதிப்படுத்துகிறது.

வேலை செய்பவர்கள் (click here)

நிறுவனத்திலிருந்து வழங்கப்படும் வேலை உறுதி கடிதம் (Employment Letter) கடந்த 3 முதல் 6 மாத சம்பள சீட்டுகள் மற்றும் விடுப்பு அனுமதி கடிதம் ஆகியவை சமர்ப்பிக்க வேண்டும்.

தொழில் நடத்துபவர்கள் (click here)

உங்கள் வணிக பதிவு சான்று (Business Registration Certificate) வரி செலுத்திய ஆவணங்கள் (Tax Returns) மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் (Bank Statements) முக்கியமானவை.

மாணவர்கள் (click here)

படிக்கும் பள்ளி அல்லது கல்லூரியிலிருந்து Bonafide Certificate மற்றும் மாணவர் அடையாள அட்டை வழங்க வேண்டும்.

வேலை இல்லாதவர்கள் அல்லது வீட்டு பொறுப்பில் இருப்பவர்கள் (click here)

சொத்து ஆவணங்கள், குடும்ப உறவு சான்றுகள் போன்றவை சமர்ப்பிக்கலாம்.

இவ்வாறான அனைத்து ஆவணங்களும் சேர்ந்து, உங்கள் சமூக மற்றும் பொருளாதார நிலைமை உறுதியாக உள்ளது என்பதை காட்டி விசா பெறுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும்.

போதுமான நிதி இருப்பை நிரூபிக்கும் ஆவணம்


கடந்த 3 மாத வங்கி கணக்கு விபரங்கள் சம்பள சீட்டுகள் அல்லது வருமான வரி ஆவணங்கள் மூலம் போதுமான நிதி வசதி இருப்பதை நிரூபிக்க வேண்டும்.

குறைந்தது €30,000 வரை கவரேஜ் கொண்ட மருத்துவ காப்பீடு (Schengen முழுவதும் செல்லுபடியாக இருக்க வேண்டும்)


குறைந்தது €30,000 ( 450 euro / 225000 LKR ) வரை மருத்துவ பாதுகாப்பு வழங்கும் பயண காப்பீடு கட்டாயம். இது அங்கீகரிக்கப்பட்ட காப்பீட்டு நிறுவனத்திலிருந்து பெறப்பட்டிருக்க வேண்டும். அதோடு விமான டிக்கெட் முன்பதிவு ஆவணமும் தேவைப்படும்.

18 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கு சிறப்பு விதிமுறைகள்

18 வயதிற்குக் குறைவான சிறுவர்கள் தனியாக அல்லது ஒரு பெற்றோருடன் மட்டும் பயணம் செய்தால் மற்ற பெற்றோரின் அனுமதி கொண்ட Notary Affidavit சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் அந்த ஆவணம் “Apostille” செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதும் முக்கிய நிபந்தனையாக குறிப்பிடப்பட்டுள்ளது.

“மீண்டும் தாய்நாட்டிற்கு திரும்பும் நோக்கம்” முக்கியம்

விசா அதிகாரிகள் விண்ணப்பதாரரின் “Migration Risk” அல்லது சட்டவிரோதமாக தங்கிவிடும் அபாயத்தை மிக முக்கியமாக மதிப்பீடு செய்கிறார்கள். இதனால் விண்ணப்பதாரர்கள் தங்கள் குடும்ப பிணைப்புகள், சொத்து ஆதாரங்கள், நிரந்தர வருமான ஆதாரங்கள், வேலை நிலைத்தன்மை

போன்ற ஆவணங்களை அதிகளவில் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் பயணம் முடிந்ததும் விண்ணப்பதாரர் Schengen பகுதியை விட்டு வெளியேறுவார் என்பதை நிரூபிக்க உதவும்.

நேர்முக நேரம் (Appointment) பெறுவது முழுமையாக VFS Global இணையதளம் மூலமாக மட்டுமே செய்யப்படும்.

சந்திப்புக்கு முன்பதிவு செய்யுங்கள் (Make an appointment)

Appointment-ஐ confirm செய்ய வேண்டும் Confirm செய்த பிறகு வரும் confirmation letter-ஐ download செய்து print எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அந்த appointment நாளில் Colombo-வில் உள்ள VFS Visa Application Centre-க்கு நேரத்திற்கு முன் சென்று உங்கள் அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் அங்கு உங்கள் biometric details (fingerprint மற்றும் photo) எடுக்கப்படும். Appointment இல்லாமல் visa விண்ணப்பிக்க முடியாது.

அல்லது இதன் மேலதிக தெளிவுக்கு நேரடியாக பெல்ஜியம் (சுவிட்சர்லாந்து) தூதரகத்தை அணுகவும். கீழ்க்கண்ட முகவரியில்

Embassy of Switzerland
63, Srimath R.G. Senanayake Mawatha (Gregory’s Road)
Colombo 7
Sri Lanka

Phone
Headquarters +94 11 269 51 17

Fax
Headquarters +94 11 269 51 76
International cooperation +94 11 268 83 48

Headquarters colombo@eda.admin.ch
Visa services colombo.visa@eda.admin.ch

Website Headquarters 

Postal address
Embassy of Switzerland
P.O. Box 342
Colombo
Sri Lanka

Schengen Visa கட்டணம் – முக்கிய குறிப்பாக நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்

பெல்ஜியம் உட்பட Schengen நாடுகளுக்கான குறுகிய கால (up to 90 days) சுற்றுலா விசாவிற்கு € 90.00 கட்டணம் செலுத்த வேண்டும் என்பது மிகவும் முக்கியமான தகவல் ஆகும்.

இந்த கட்டணம் பெரியவர்கள் (adults)க்கு பொதுவாக பொருந்தும். விண்ணப்பிக்கும் போது இந்த தொகையை சரியாக செலுத்த வேண்டும் சில சமயங்களில் VFS Global மூலம் local currency-ஆக (Sri Lankan Rupees) மாற்றி வசூலிக்கப்படலாம்.

visa fee பொதுவாக non-refundable ஆக இருக்கும் அதாவது உங்கள் விசா நிராகரிக்கப்பட்டாலும் பணம் திரும்ப கிடைக்காது அதனால் விண்ணப்பிக்கும் முன் அனைத்து ஆவணங்களையும் சரியாக தயார் செய்து சமர்ப்பிப்பது மிகவும் அவசியம்.

இந்த €90 கட்டணம் என்பது Schengen visa விண்ணப்பத்தில் முக்கியமான கட்டாய செலவாக இருப்பதால் இதை நீங்கள் மறக்காமல் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading