அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் நிலையை முடிவுக்குக் கொண்டுவரும் முக்கிய ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இரு தரப்பினரின் பேச்சுவார்த்தைகள் “மிகவும் நெருக்கமான நிலைக்கு” வந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். தகவல்களின் படி போரை முடிவுக்குக் கொண்டுவரும் ஒப்பந்தத்தில் 60 நாள் போர்நிறுத்தம் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறத்தல் மேலும் அணு ஆயுதம் தொடர்பான கட்டுப்பாடுகள் போன்ற விடயங்கள் இடம்பெறலாம் என கூறப்படுகிறது.
எனினும் ஒப்பந்தத்தை அவசரப்படுத்த விரும்பவில்லை என்றும் “சரியான உடன்பாடு மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்” என்றும் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். இதேவேளை இன்னும் சில முக்கிய முரண்பாடுகள் தீர்க்கப்பட வேண்டியுள்ளன என்று ஈரான் தரப்பும் எச்சரித்துள்ளது. இந்நிலையில் லெபனான் உள்ளிட்ட பிராந்திய பாதுகாப்பு விவகாரங்களும் பேச்சுவார்த்தைகளில் தாக்கம் செலுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்திற்கு முக்கியமான ஹோர்முஸ் நீரிணை மீளத் திறக்கப்படுமா என்ற கேள்வியும் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.





Leave a Reply