அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவரும் சமாதான ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் முன்னேறி வருவதாகத் தகவல்கள் வெளியாகும் நிலையில் அமெரிக்க அரசியல் வட்டாரங்களுக்குள் இருந்தே எதிர்ப்புகள் அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக ஒப்பந்தத்தின் சில அம்சங்கள் அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு கொள்கை நலன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்ற கவலைகள் எழுந்துள்ளன.
இதனால் பேச்சுவார்த்தையை விரைவாக நிறைவு செய்வதில் அமெரிக்க தரப்பிலேயே மந்தநிலை உருவாகியுள்ளதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் ஒப்பந்தம் நெருங்கிவிட்டதாக கூறினாலும் ஈரானின் அணு திட்டம் தடைகள் தளர்த்தல் ஹோர்முஸ் நீரிணை நிலைமை உள்ளிட்ட முக்கிய விடயங்களில் இன்னும் கருத்து வேறுபாடுகள் நீடிக்கின்றன. அமெரிக்க உள்நாட்டு அரசியல் அழுத்தங்களும் பாதுகாப்பு அணுகுமுறைகளும் இந்த சமாதான முயற்சியின் வேகத்தை குறைத்து வருவதாக சர்வதேச அரசியல் விமர்சகர்கள் மதிப்பிடுகின்றனர்





Leave a Reply