சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

Germany EU Blue Card 2026, ஜெர்மனியில் வேலை செய்ய விரும்பும் திறமையான வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான EU Blue Card விண்ணப்பங்களில் 2026 முதல் புதிய குறைந்தபட்ச சம்பள வரம்புகள் அமலுக்கு வருகின்றன. புதிய விதிகளின் படி சாதாரண தொழில்களுக்கு வருடாந்திர குறைந்தபட்ச மொத்த சம்பளம் €50,700 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேசமயம் IT, பொறியியல், மருத்துவம், கணிதம் போன்ற திறனாளி பற்றாக்குறை (Shortage Occupations) உள்ள துறைகளுக்கு €45,934.20 என்ற குறைந்த சம்பள வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றம் Germany EU Blue Card 2026 ஜனவரி 1 முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் சம்பள வரம்பு உயர்த்தப்பட்டதால் வேலை ஒப்பந்தம் (Job Contract) பெறும் போது நிறுவனங்கள் புதிய அளவுகோலுக்கு ஏற்ப சம்பளம் வழங்க வேண்டியது அவசியமாகிறது. குறிப்பாக ஜெர்மனியில் வேலைக்கு செல்ல திட்டமிடும் IT மற்றும் தொழில்நுட்ப துறையினருக்கு இது முக்கிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.

📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!

WhatsApp / Call: +94 76 572 9042

மேலும் பல்கலைக்கழக பட்டம் இல்லாத IT நிபுணர்களும் சில நிபந்தனைகளின் கீழ் EU Blue Card பெற முடியும். கடந்த 7 ஆண்டுகளில் குறைந்தது 3 ஆண்டுகள் அனுபவம் இருந்தால் மற்றும் சம்பள வரம்பை பூர்த்தி செய்தால் விண்ணப்பிக்க அனுமதி வழங்கப்படுகிறது.

EU Blue Card மூலம் ஜெர்மனியில் நீண்டகால வேலை மற்றும் நிரந்தர குடியிருப்பு (PR) பெறும் வாய்ப்பும் உள்ளது. B1 ஜெர்மன் மொழி திறன் இருந்தால் 21 மாதங்களில் நிரந்தர குடியிருப்புக்கு விண்ணப்பிக்கலாம்; இல்லையெனில் பொதுவாக 27 மாதங்கள் தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Recent posts

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்