மற்றும் Oman இடையே ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களிடம் கட்டணம் வசூலிக்கும் திட்டம் தொடர்பாக முக்கிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகின் எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்தின் முக்கியப் பாதையாக இருக்கும் ஹோர்முஸ் நீரிணையை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈரான் ஈடுபட்டுள்ளதாக மேற்கத்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து சர்வதேச கடல் பாதையில் கட்டணம் விதிப்பது “சட்டவிரோதம்” என எச்சரித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் Marco Rubio இந்த திட்டம் உலக வர்த்தகத்திற்கே அச்சுறுத்தலாக அமையும் என தெரிவித்துள்ளார். இதேவேளை சமாதான பேச்சுவார்த்தைகளில் சில முன்னேற்றங்கள் இருப்பதாகவும் ஆனால் நிலைமை இன்னும் பதற்றமாகவே தொடர்வதாகவும் அமெரிக்க தரப்பு கூறியுள்ளது.













Leave a Reply