குவைத் நகரில் நவம்பர் 2 அன்று தொடங்கிய குவைத் திட்ட மேலாண்மை மாநாட்டில், பொதுப்பணித்துறை அமைச்சர் டாக்டர் நூரா அல்-மஷானின் சார்பில் பேசிய கட்டுமானம் மற்றும் பெரிய திட்டங்கள் துறையின் தலைமை இயக்குநர் பொறியாளர் துஹா அல்-தாஹி இதனைத் தெரிவித்தார். மாநாடு வியாழக்கிழமை வரை நடைபெறுகிறது.
Kuwait-Riyadh rail link திட்டத்தின் அடுத்த கட்டம்
வளைகுடா ரயில்வே திட்டம் தற்போது வடிவமைப்பு கட்டத்தில் இருப்பதாகவும், அதன் பெரும்பகுதி நிறைவடைந்துள்ளதாகவும் துஹா அல்-தாஹி கூறினார். குவைத் மற்றும் ரியாத் இடையிலான ரயில் இணைப்புக்கான முழுமையான திட்ட ஒப்பந்தத்தை ஏலம் கோரும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் விளக்கினார்.
குவைத் விமான நிலையத் திட்டம் முன்னேற்றம் அடைந்து வருவதாகவும், அதன் பணிகள் தினசரி கண்காணிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். சீனாவுடன் ஆகஸ்ட் மாதம் கையெழுத்தான ஒப்பந்தத்தின் அடிப்படையில் முபாரக் அல்-கபீர் துறைமுகத் திட்டமும் கால அட்டவணைப்படி செயல்படுத்தப்பட்டு வருவதாக கூறினார்.
குவைத் 2035 இலக்குகளை அடைய பெரிய திட்டங்களில் செயற்கை நுண்ணறிவு, தரவு மேலாண்மை, டிஜிட்டல் மாற்றம், இடர் மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். இளைஞர்களுக்குப் பயிற்சி அளித்தல் மற்றும் பொதுத்துறை, தனியார் துறை, கல்வி நிறுவனங்களுக்கிடையிலான கூட்டாண்மையை வலுப்படுத்துதல் மாநாட்டின் முக்கிய நோக்கங்களாகும்.

































