அமெரிக்கா ஈரான் உயர்மட்ட சமாதான பேச்சுவார்த்தை தோல்வி.
மத்திய கிழக்கு பகுதியில் நிலவி வரும் பதற்றத்தை குறைக்கும் நோக்கில் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் நடைபெற்ற அமெரிக்கா ஈரான் உயர்மட்ட சமாதான பேச்சுவார்த்தை எந்த உடன்பாடும் இல்லாமல் முடிவடைந்துள்ளது.
சுமார் 21 மணி நேரம் நீண்ட இந்த முக்கிய பேச்சுவார்த்தையில் அணு ஆயுத திட்டம் ஹோர்முஸ் நீரிணை கட்டுப்பாடு மற்றும் பொருளாதார தடைகள் போன்ற முக்கிய பிரச்சினைகள் குறித்து இரு நாடுகளும் கடும் கருத்து வேறுபாட்டில் இருந்தன.
அமெரிக்க தரப்பு ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்காத உறுதிமொழி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்திய நிலையில் ஈரான் அதனை நிராகரித்ததாக கூறப்படுகிறது. இதேவேளை ஈரான் அமெரிக்கா மிகைப்படுத்தப்பட்ட கோரிக்கைகளை முன்வைத்ததாக குற்றம்சாட்டியுள்ளது.
இந்த பேச்சுவார்த்தை தோல்வி, ஏற்கனவே பல வாரங்களாக நீடித்து வரும் மோதலின் மத்தியில் ஏற்பட்டிருந்த தற்காலிக போர்நிறுத்தத்திற்கே பாதிப்பு ஏற்படுத்தக்கூடும் என அச்சம் நிலவுகிறது.





Leave a Reply