குவைத் பாதுகாப்பு தொடர்பாக எந்த அச்சுறுத்தலும் இல்லை.
குவைத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நாட்டின் பாதுகாப்புக்கு எந்தவிதமான அச்சுறுத்தல்களும் பதிவாகவில்லை என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் பிராந்திய பதற்றங்கள் நிலவிவரும் சூழலில் பாதுகாப்பு மற்றும் இராணுவப்படைகள் முழுமையான தயார்நிலையிலும் உயர்ந்த எச்சரிக்கையிலும் செயல்பட்டு வருகின்றன.
மேலும் முன்னர் நடைபெற்ற பாதுகாப்பு தலையீடுகளின் போது விழுந்த சிதறல் பொருட்கள் தொடர்பாக பல புகார்கள் கிடைத்துள்ளன அவற்றை வெடிகுண்டு நீக்கம் அணிகள் திறம்பட கையாளுகின்றன.
அதிகாரிகள் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன என்றும் உதவித்தொகைகள் மற்றும் நன்கொடைகள் அதிகாரப்பூர்வ வழிகளிலேயே வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.





Leave a Reply