குவைத்தில் புதிய போக்குவரத்து சட்டங்களின் கீழ் பாதசாரிகள் சாலை கடக்கும் விதிமுறைகளை மீறினால் கடுமையான அபராதங்கள் விதிக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக குறிப்பிட்ட நடைபாதை (Pedestrian Crossing) பகுதிகளை பயன்படுத்தாமல் சாலையை கடக்கும் நபர்களுக்கு 20 தொடக்கம் 75 குவைத் தினார் வரை அபராதம் விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. குவைத்தில் சாலை பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில் அரசு பல புதிய நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய சட்டங்களின் மூலம் வாகன ஓட்டிகளுடன் பாதசாரிகளும் போக்குவரத்து ஒழுங்குகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகள் தெரிவிப்பதாவது விதிகளை மீறும் நபர்களுக்கு உடனடி அபராதம் மட்டுமல்லாமல் பாதுகாப்பு கண்காணிப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.













Leave a Reply