குவைத்தில் அனுமதியற்ற பயணிகள் போக்குவரத்து மேற்கொள்பவர்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். உரிய அனுமதி இல்லாமல் பணம் பெற்றுக்கொண்டு பயணிகளை ஏற்றிச் செல்லும் ஓட்டுநர்களுக்கு உடனடி சமரச அபராதமாக KD150 விதிக்கப்படும்.
வழக்கு நீதிமன்றத்துக்கு சென்றால் 1 முதல் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது KD600 முதல் KD1,000 வரை அபராதம் விதிக்கப்படலாம். மேலும் விதிமீறலில் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். சட்டவிரோத குடியிருப்பாளர்கள் மற்றும் அனுமதியற்ற போக்குவரத்து சேவைகளை கட்டுப்படுத்த குவைத் அதிகாரிகள் சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.













Leave a Reply