பிரான்சில் SMIC சம்பளம் உயர்வு
பிரான்சில் குறைந்தபட்ச ஊதியமான SMIC (Salaire minimum interprofessionnel de croissance) 2026 ஜூன் 1 முதல் 2.41% உயர்த்தப்பட உள்ளது. பிரான்சில் வேலை செய்பவர்கள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் ஊழியர்களுக்கு இது முக்கியமான மாற்றமாகும்.
புதிய உயர்வின் படி மணிநேர அடிப்படை SMIC €12.31 ஆக அதிகரிக்கிறது. முழுநேர வேலைக்கு மாதாந்திர மொத்த சம்பளம் €1,867.02 ஆகவும் நிகர சம்பளம் €1,477.93 ஆகவும் உயர்கிறது. இந்த மாற்றம் முக்கியமாக எரிசக்தி விலையேற்றம் மற்றும் பணவீக்கம் அதிகரித்ததன் காரணமாக தானியங்கி முறையில் நடைமுறைக்கு வருகிறது என்று பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.
மேலும் பிரான்சில் SMIC சம்பளம் உயர்வு மெய்நிலப்பகுதி மட்டுமல்லாமல் குவாதலூப் மார்டினிக், கயானா, ரீயூனியன் உள்ளிட்ட பிரான்ஸ் வெளிநாட்டு பிரதேசங்களிலும் அமல்படுத்தப்படும். Mayotte பகுதியில் தனிப்பட்ட SMIC தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது. பிரான்சின் சட்டப்படி பணவீக்கம் 2% ஐ கடந்தால் SMIC தானாக மறுஆய்வு செய்யப்படும் விதிமுறை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.













Leave a Reply