ஹோர்முஸ் நீரிணை – ஈரானுக்கு எச்சரிக்கை இடும் துபாய்.
ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) என்பது உலகின் மிக முக்கியமான கடல் வழித்தடங்களில் ஒன்றாகும். இந்த நீரிணை வழியாக உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிசக்தி விநியோகத்தின் பெரும் பகுதி நடைபெறுகிறது.
இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய அதிகாரியான டாக்டர் சுல்தான் அல் ஜாபர் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் கட்டுப்படுத்தவோ அல்லது மூடவோ எந்த உரிமையும் இல்லை எனத் தெளிவாக தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது இந்த நீரிணை ஒரு நாடின் சொத்தாக அல்ல இது உலக பொருளாதாரத்திற்கு முக்கியமான உயிர்க்கோடு போன்றது. இதனைத் தடுக்க அல்லது தடையிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் அது உலகளாவிய அளவில் எரிசக்தி விநியோகம் மட்டுமின்றி உணவு பாதுகாப்பு மற்றும் சுகாதார அமைப்புகளுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரித்தார்.
மேலும் ஹோர்முஸ் நீரிணையில் ஏற்படும் எந்த விதமான பதற்றமும் எண்ணெய் விலை உயர்வை தூண்டி பல நாடுகளின் பொருளாதார நிலைத்தன்மையை குலைக்கும். குறிப்பாக இந்த வழித்தடத்தை அதிகமாக நம்பியுள்ள ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகும்.
இதனால் உலக நாடுகள் அனைத்தும் இந்த முக்கிய கடல் பாதையை பாதுகாப்பதற்கான ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.





Leave a Reply