இதற்கு பதிலளித்த ஈரான், அமெரிக்கா விதித்த கடற்படை மறியல் மற்றும் ஹோர்முஸ் நீரிணை கட்டுப்பாடுகள் தொடர்ந்தால் கடுமையான பதில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் நீரிணையில் போர் கப்பல்களை அனுப்பும் முயற்சியும் பிராந்திய பதற்றத்தை அதிகரித்துள்ளது.
உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து பாதையாக கருதப்படும் ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் சர்வதேச எண்ணெய் விலைகள் உயரத் தொடங்கியுள்ளன. இந்த நிலைமை உலக பொருளாதாரத்துக்கும் எரிசக்தி சந்தைக்கும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.






























