2026 ஆம் ஆண்டில் மட்டும் 164,850 வேலை அனுமதிகள் வழங்கப்படவுள்ளன. இதில் 88,000 அனுமதிகள் விவசாயம் மற்றும் சுற்றுலாத்துறைக்கான பருவகால (Seasonal) பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள அனுமதிகள் கட்டுமானம், உற்பத்தி, போக்குவரத்து, சேவைத் துறை, குடும்ப பராமரிப்பு மற்றும் சில சுயதொழில் பிரிவுகளுக்காக வழங்கப்படவுள்ளன.
இந்த வேலை அனுமதிகளுக்கான விண்ணப்பங்களை வெளிநாட்டு தொழிலாளர்கள் நேரடியாக சமர்ப்பிக்க முடியாது. இத்தாலி அரசு இத்தாலியில் உள்ள வேலைவாய்ப்பு வழங்குநர் (Employer) முதலில் அரசு இணையதளத்தின் மூலம் Nulla Osta எனப்படும் வேலை அனுமதி ஒப்புதலுக்காக விண்ணப்பிக்க வேண்டும். அந்த அனுமதி கிடைத்த பின்னரே தொழிலாளர் தமது நாட்டிலுள்ள இத்தாலிய தூதரகம் அல்லது விசா மையம் வழியாக வேலை விசாவிற்கு விண்ணப்பிக்க முடியும்.
இத்திட்டம் இலங்கை உள்ளிட்ட பல EU அல்லாத நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கும் வாய்ப்புகளை உருவாக்கக்கூடியதாகக் கருதப்படுகிறது. எனினும் வேலை அனுமதி ஒதுக்கீடுகள் விண்ணப்ப தேதிகள் மற்றும் தகுதி நிபந்தனைகள் தொடர்பான இறுதி நடைமுறைகள் ஒவ்வொரு ஆண்டும் இத்தாலி அரசு வெளியிடும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளின் அடிப்படையில் அமல்படுத்தப்படும்.





























