அலெக்ஸ் கிப்னி இயக்கிய “Musk” ஆவணப்படத்தில் ஆஷ்லி செயின்ட் கிளேர், மஸ்க் குறித்து தனது அனுபவங்களை வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார். இருவருக்கும் 2024ஆம் ஆண்டு ரோமுலஸ் என்ற மகன் பிறந்தார். பிரிவுக்குப் பிறகு, மஸ்க் குறித்து பொதுவெளியில் பேசாமல் இருப்பதற்காக 40 மில்லியன் டாலர் மதிப்பிலான Non-Disclosure Agreement வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
உண்மைக்காகப் பணத்தை நிராகரித்த முடிவு
பொருளாதார வசதிக்காக உண்மையைத் தியாகம் செய்யக் கூடாது என்பதைத் தனது குழந்தைகளுக்கு எடுத்துக்காட்ட விரும்பியதால் அந்த ஒப்பந்தத்தை நிராகரித்ததாக ஆஷ்லி கூறினார். “உண்மையின் விலையாக பொருளாதார வசதியைத் தேர்வு செய்யக் கூடாது” என்பதே தனது நிலைப்பாடு என அவர் விளக்கினார்.
கடந்த காலத்தில் பழமைவாத மற்றும் எல்ஜிபிடி எதிர்ப்பு கருத்துகளைத் தெரிவித்ததற்கும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். 18 வயதில் சார்லி கிர்க்கை சந்தித்த பிறகு குடியரசுக் கட்சியுடன் இணைந்ததாகவும், அப்போது அறியாமை இருந்ததாகவும் அவர் கூறினார்.
ஆவணப்பட இயக்குநர் அலெக்ஸ் கிப்னி, பல முன்னாள் சக பணியாளர்கள், நண்பர்கள் மற்றும் விமர்சகர்கள் விளைவுகளைப் பற்றிய அச்சத்தால் பேச மறுத்ததாகத் தெரிவித்தார். Ashley St. Clair NDA குறித்த இந்த வெளிப்பாடு, ஆவணப்படத்தில் இடம்பெறும் முக்கியமான சாட்சியங்களில் ஒன்றாக அமைந்துள்ளது.
































