Sky News தகவலின்படி தேர்தல் தோல்விகள் மற்றும் கட்சிக்குள் அதிகரித்து வரும் அதிருப்தியின் பின்னணியில் ஸ்டார்மர் “தன் விருப்பங்களை பரிசீலித்து வருகிறார்” என கூறப்படுகிறது. சில அமைச்சர்கள் “நிலைமை முடிந்துவிட்டது” எனக் கருத மற்றவர்கள் அவருக்கு ஆதரவாக உள்ளனர். இதேவேளை சில இளநிலை அமைச்சர்கள் ராஜினாமா செய்ததுடன் பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவரின் விலகலை அல்லது கால அட்டவணை அறிவிப்பை கோரியுள்ளனர்.
இந்த அரசியல் குழப்பம் காரணமாக லேபர் கட்சிக்குள் தலைமை மாற்றம் குறித்த பேச்சுகள் தீவிரமடைந்துள்ளன. அதேசமயம் ஸ்டார்மர் தனது பதவியை விட்டு செல்லப்போவதில்லை என்றும் கட்சியை ஒன்றுபடுத்தி முன்னேற்ற முயற்சிப்பதாகவும் கூறி வருகிறார். இருப்பினும் வரவிருக்கும் அமைச்சரவை கூட்டம் அவரது பிரதமர் பதவியின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.































