சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

சுவிட்சர்லாந்தில் வேலை செய்து ஆனால் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி போன்ற அண்டை நாடுகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான எல்லைத் தாண்டி பணிபுரிபவர்களின் (Cross-border workers) வேலை இழப்பு நலன்கள் தொடர்பாக புதிய ஐரோப்பிய ஒன்றிய (EU) மாற்றம் ஒன்று பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள முறையின் படி ஒருவர் சுவிட்சர்லாந்தில் வேலை செய்து பின்னர் வேலை இழந்தால் அவர் வசிக்கும் நாடே வேலை இழப்பு நிதியை வழங்குகிறது. ஆனால் புதிய EU திருத்தத்தின் கீழ் அவர் கடைசியாக வேலை செய்த நாடே அதாவது சுவிட்சர்லாந்தே அந்த நிதியை வழங்க வேண்டும் என முன்மொழியப்பட்டுள்ளது.

📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!

WhatsApp / Call: +94 76 572 9042

பிரான்ஸ் தொழிலாளர் அமைச்சர் Jean-Pierre Farandou இந்த மாற்றத்தை செயல்படுத்த சுவிட்சர்லாந்துக்கு அழுத்தம் கொடுக்கப்படும் என்று தெரிவித்தார். தற்போது உள்ள முறையால் பிரான்ஸ் ஆண்டுக்கு சுமார் 860 மில்லியன் யூரோ இழப்பை சந்திக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

குறிப்பாக சுவிட்சர்லாந்தில் வேலை செய்து பிரான்சில் வசிக்கும் ஆயிரக்கணக்கானோர் தற்போது பிரான்ஸ் unemployment benefits பெறுகின்றனர்.

சுவிஸ் அரசின் பொருளாதார செயலாளர் அலுவலகமான SECO வெளியிட்ட தகவலின்படி இந்த மாற்றம் அமலுக்கு வந்தால் சுவிட்சர்லாந்துக்கு ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான மில்லியன் ஃப்ராங்க் கூடுதல் செலவாகும் அபாயம் உள்ளது.

தற்போது எல்லைத் தாண்டி பணிபுரிபவர்கள் Swiss unemployment insurance-க்கு பணம் செலுத்துவதால் சுவிட்சர்லாந்துக்கு லாபம் கிடைக்கிறது. ஆனால் புதிய முறை அமலானால் அந்த சமநிலை மாறி CHF 300 முதல் 600 மில்லியன் வரை இழப்பு ஏற்படலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

📢 உங்கள் வணிக விளம்பரங்களுக்கு இன்றே அழையுங்கள்!

WhatsApp / Call: +94 76 572 9042

2025 இறுதியில் மட்டும் சுமார் 4 இலட்சத்திற்கும் அதிகமான வெளிநாட்டு எல்லைத் தாண்டி பணியாளர்கள் சுவிட்சர்லாந்தில் வேலை செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய EU விதிமுறை நடைமுறைக்கு வருவதற்கு முன் ஐரோப்பிய பாராளுமன்றத்தின் ஒப்புதலும் பின்னர் சுவிட்சர்லாந்தின் வெளிப்படையான சம்மதமும் தேவைப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Recent posts

Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4
Image 1 Image 2 Image 3 Image 4

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்